சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை உயர்த்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன் காரணமாக இருநாடுகளுக்கிடையே வார்த்தக போர் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. சீனா – அமெரிக்கா இடையே மறைமுகமான வர்த்தகப்போர் நடைபெற்று வருகிறது. இருநாடுகளும் இறக்குமதி வரியை அடிக்கடி உயர்த்தி வந்தன. இதற்கு முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், சீன அதிபர் ஸ ஜின்பிங்கும் கடந்த டிசம்பரில் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தை மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுவரையில் சுமுக முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் குறிப்பிட்ட சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10ல் இருந்து 25% ஆக உயர்த்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் 5000 சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படும். அதன் அடிப்படையில் சீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.