வைரல்

விரைவில் முக்கிய அறிவிப்பு : இந்தியாவை பரபரப்பாக்கிய Hindenburg!

இந்தியா தொடர்பான முக்கிய அறிக்கையை வெளியிடப் போவதாக பிரபல பங்குச்சந்தை ஆய்வு அமைப்பான Hindenburg அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரைவில் முக்கிய அறிவிப்பு : இந்தியாவை பரபரப்பாக்கிய Hindenburg!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் போது, பொருளாதாரம் கடுமையாக சரிந்தது. இந்த சரிவில் இருந்து இன்னும் கூட மீள முடியாமல் இந்தியா தவித்து வருகிறது. மேலும் பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்தனர்.

ஆனால் அதானி குழும நிறுவனத்தின் வருவாய் மட்டும் கணிசமாக உயர்ந்தது. இது எப்படி? என அப்போதே ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்துதான் அதானி குழும நிறுவனங்கள் வரவு - செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து அதானி நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்தது. மேலும் நாடாளுமன்றத்திலும் ஹிண்டன்பர்க் அறிக்கை விவாதபொருளாக மாறியது.

அதோடு உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டன. ஹிண்டன்பர்க் அறிக்கையை கொண்டு செபி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பான செபி விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்தியா சம்பந்தப்பட்ட முக்கிய அறிக்கையை வெளியிடப் போவதாக பிரபல பங்குச்சந்தை ஆய்வு அமைப்பான ஹிண்டன்ஸ் பர்க் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து யார் முறைகேடு குறித்து ஹிண்டன்ஸ்பர்க் வெளியிட போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories