வைரல்

பா.ஜ.க MLA தலைமையில் நடந்த மிகப்பெரிய திருமண மோசடி : உத்தர பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் அரசின் திட்டத்தை பெறுவதற்காக பா.ஜ.க MLA தலைமையில் நடந்த மிகப்பெரிய திருமண மோசடி நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க MLA தலைமையில் நடந்த மிகப்பெரிய திருமண மோசடி : உத்தர பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தில் முதலமைச்சரின் சமூகத் திருமண திட்டம் ஒன்று நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களுக்கே இந்த திட்டம் அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் மணமகளுக்கு வங்கியில் ரூ.35 ஆயிரம் செலுத்துவதுடன் புதிய தம்பதிகளுக்கு ரூ.16 ஆயிரம் செலவில் பொருட்கள் வழங்கப்படுகிறது.

அந்தவகையில் ஜனவரி 25 ஆம் தேதி பாலியாலா என்ற பகுதியில் முதலமைச்சரின் சமூகத் திருமண திட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்குத் திருமணம் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ கேத்கி சிங் தலைமையில் நடந்துள்ளது.

பா.ஜ.க MLA தலைமையில் நடந்த மிகப்பெரிய திருமண மோசடி : உத்தர பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இந்நிலையில் இந்த திருமண நிகழ்ச்சியில் பல மோசடிகள் நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக அதிகாரிகள் உட்படப் பலர் மணமகனாக நடித்து அரசின் திட்டத்தைப் பெற்றுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

இந்த திருமண நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட போலி ஜோடிகள் நடிக்க வைக்கப்பட்டு அவர்களுக்கு ரூ.2000 பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர். அதேபோல் 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்தவர்களும் போலியான ஆவணங்களைக் காண்பித்து இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக நலத்துறை உதவி வளர்ச்சி அலுவலர் விண்ணப்பங்களை ஆய்வு செய்யாமல் அலட்சியமாக இருந்ததால்தான் இந்த மோசடி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் உட்பட 15 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories