ஜெர்மனியிலிருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு விமானம் ஒன்று சென்றது. இதில் 300க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென விமானத்தில் பயணம் செய்த கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டது. பிறகு இவர்கள் ஒரு கட்டத்தில் கையில் கிடைத்த பொருட்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இவர்களை மற்ற பயணிகள் எவ்வளவு சமாதானம் செய்தும் முடியவில்லை.
இந்த தம்பதிகளின் சண்டையால் மற்ற பயணிகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என அஞ்சி விமானத்தை அவசரமாகத் தரையிறக்க விமானி முடியு செய்துள்ளார். அப்போது இவர்கள் இந்திய எல்லையில் பறந்து கொண்டிருந்தனர்.
உடனே அருகே இருந்த டெல்லி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு, அவசர அவசரமாக விமானத்தைத் தரையிறக்கி தம்பதிகளை அங்கிருந்த விமான அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த தம்பதிகளிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயந்திர கோளாறு, பயணிக்கு திடீர் மாரடைப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற காரணங்களுக்காக விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்படும். ஆனால் கணவன் மனைக்கு இடையே ஏற்பட்ட சண்டையால் இப்படி விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது டெல்லி விமான நிலையத்திலிருந்த அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.