உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாகர் பகுதியைச் சேர்ந்தவர் சலீமா கான். இவருக்கு 14 வயது இருக்கும் போது திருமணம் நடந்துள்ளது. இதனால் அவர் தனது பள்ளி படிப்ப அப்படியே நின்றுவிட்டது.
பின்னர் கணவன், மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள் என குடும்ப வாழ்க்கையில் மூழ்கிவிட்டார். இருந்தாலும் இவருக்கு அவ்வப்போது பள்ளிக்குச் செல்லும் மாணவர்களைப் பார்க்கும் போது எல்லாம் அவரின் பள்ளி நாட்களை அசைபோட்டு வந்துள்ளார்.
மேலும் நாம் எழுதவும் படிக்கவும் வேண்டும் என்ற ஆசையும் இருந்துள்ளது. இதனைத் தெரிந்து தொண்ட அவரது குடும்பத்தினர் அவரை எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கிராம சபை பள்ளியில் சேர்த்துள்ளனர். முதலில் 92 வயதாகும் மூதாட்டியை எப்படி பள்ளியில் சேர்ப்பது என்ற தயக்கம் இருந்துள்ளது.
ஆனால் அவர் கல்வி மீது கொண்ட அர்வத்தை பார்த்த பள்ளி முதல்வர் அவரை சேர்த்துக் கொண்டார். தற்போது 92 வயதாகும் மூதாட்டி சலீமா கான் தினமும் பள்ளிக்குச் சென்று படித்து வருகிறார். இவரை விட 80 வயது குறைவான சிறுமிகளே இவரின் வகுப்பு தோழிகள் ஆவர்.
மேலும் சலீமா கான் பள்ளிக்குச் செல்வதைப் பார்த்து 20க்கும் மேற்பட்ட பெண்களும் பள்ளிக்குச் செல்கின்றனர். இதன் மூலம் கல்விக்கு வயது ஒரு தடையில்லை என்பதை மீண்டும் அனைவருக்கும் நினைவூட்டியுள்ளார் 92 வயது மூதாட்டி.