வைரல்

இ- வாலட் மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?.. டிஜிட்டல் பயனாளர்களுக்கான 5 முக்கிய ஆலோசனைகள்!

Paytm, MobiKwik போன்ற நிறுவனங்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து, இ-வாலட் பயனர்களிடமிருந்து முக்கியமான தகவல்களை பெறும் போசடி அதிகரித்துள்ளது சைபர் கிரைம் போலிஸார் எச்சரிககை விடுத்துள்ளனர்.

இ- வாலட் மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?.. டிஜிட்டல் பயனாளர்களுக்கான 5 முக்கிய ஆலோசனைகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டன. அதேபோல் மோசடி செய்பவர்களும் புதிய யுக்திகளை வகுத்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது Paytm, MobiKwik போன்ற நிறுவனங்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து, இ-வாலட் பயனர்களிடமிருந்து முக்கியமான தகவல்களை பெறும் போசடி அதிகரித்துள்ளது.எனவே ஆன்லைன் மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருப்பது அவசியம்.

இந்த மோசடி எவ்வாறு நிகழ்கிறது?

Paytm/ MobiKwik போன்ற பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் தளத்தில் இருந்து Interactive Voice Response (IVR) தொலைபேசி அழைப்பைப் பெறுகின்றனர். அழைப்பில், இ-வாலட் கணக்கை புதிய சாதனம் ஒன்று அணுக முற்படுவதாக தெரிவிக்கிறது. இதை செயல்படுத்து எண் "1" ஐ அழுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. அறிவுறுத்துகிறது.

பின்னர் "1" ஐ அழுத்திய பிறகு, குறுஞ்செய்தி மூலம் பெறப்பட்ட OTP ஐ (ஒரு முறை கடவுச்சொல்) உள்ளிடும்படி கூறுகிறது. OTP ஐ உள்ளிட்டவுடன் அழைப்பு துண்டிக்கப்படுகிறது. பின்னர் இ-வாலட்டின் போஸ்ட்பெய்ட் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படுகிறது. மேலும் அவர்களது தகவல்களும் திருடப்படுகிறது.

இ- வாலட் மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?.. டிஜிட்டல் பயனாளர்களுக்கான 5 முக்கிய ஆலோசனைகள்!

இந்த மோசடி தொடர்பாக கடந்த மாதத்தில் மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள சைபர் கிரைம் கூடுதல் காவல்துறை இயக்குநர், சஞ்சய் குமார் கூறுகையில், "கோரப்படாத அழைப்புகளைப் பெறும்போது, குறிப்பாக தனிப்பட்ட தகவல்களைக் கோருபவர்களிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலியில் வழங்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்ணைத் தொடர்புகொள்வதன் மூலம் அழைப்பாளரின் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும்.

Paytm/MobiKwik அல்லது எந்தவொரு சேவையும் உங்கள் OTP ஐ தொலைபேசியில் பகிரும்படி கேட்காது. உங்கள் OTP ஐ ரகசியமாக வைத்திருங்கள், அழைப்புகள், SMS அல்லது மின்னஞ்சல்கள் மூலமாக யாருடனும் பகிர வேண்டாம்.தெரிந்த நிறுவனத்திலிருந்து SMS வருவது போல் தோன்றினாலும், அதன் உள்ளடக்கத்தை கவனமாக ஆராயுங்கள்.

சந்தேகத்திற்கிடமான அல்லது அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு உங்கள் வங்கி, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு அறிக்கைகளை தவறாமல் மதிப்பாய்வு செய்யவும். முன்கூட்டியே கண்டறிவதன் மூலம் பணஇழப்புகளைத் தடுக்கலாம்.

முடிந்தவரை இரு காரணி அங்கீகாரத்தை (2FA) இயக்கவும். கடவுச்சொல்லை மட்டும் இல்லாமல், உங்கள் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும் ஒருமுறைக் குறியீட்டையும் பயன்படுத்துவது கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கிறது. நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், உடனடியாக சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories