நாடு முழுவதும் இன்று சகோதர சகோதரிகள் தினமான ரக்ஷாபந்தன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் சகோதரிகள், தங்கள் சகோதரிக்கு ராக்கி என்று சொல்லக்கூடிய கயிறு ஒன்றை கட்டி விடுவர். அவ்வாறு அவர்கள் கட்டினால் எந்த காலத்திலும் சகோதரிக்கு உறுதுணையாக பக்கபலமாக இருக்க வேண்டும் என்று ஒரு ஐதீகம் உள்ளது.
மேலும் அவ்வாறு பூஜை செய்து, கயிறு கட்டி விடும் சகோதரிகளுக்கு சகோதரர்கள் பரிசு வழங்க வேண்டும். அதோடு அவர்கள் கேட்டதையும் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் வட மாநிலங்களில் கொண்டாடப்படும் இந்த நாளுக்காக சகோதரிகள் காத்திருப்பர். ஏனெனில் அன்று தான் தங்கள் சகோதரரின் தங்களுக்கு கேட்டதையெல்லாம் செய்வார் என்று.
சில நேரங்களில் சகோதரிகள் கேட்கும் பரிசை அவர்களால் வாங்கி தர இயலாது; அல்லது அவர்கள் வெளியே இருக்கிறது அது, இது என்று ஏதேனும் காரணத்தை சொல்லி அங்கிருந்து ஓடி விடுவர். இதனால் சகோதரிகள் பல திட்டம் தீட்டி தங்கள் சகோதரனிடம் இருந்து பரிசுகளை பெற்றுகொள்வர். எனினும் சில நேரங்களில் டேக்கா கொடுக்கும் அண்ணங்களுக்கு தற்போது செக் வைக்கும் விதமாக புதிதாக ஒன்று அறிமுகமாகியுள்ளது.
அதாவது, மெஹந்தியில் QR Code வரைந்து அதன் மூலம் அண்ணன்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் முறை. இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. "இது டிஜிட்டல் மெஹந்தி ராக்கி" என்று குறிப்பிட்டுள்ள அந்த வீடியோவில் பெண் ஒருவர் தனது கையில் QR Code வடிவில் மெஹந்தி வரைந்துள்ளார். அதனை ஸ்கேன் செய்யும்போது, பணம் அனுப்பும் வகையில் UPI க்குள் செல்கிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பல்வேறு கருத்துகளையும் பெற்று வருகிறது. மேலும் இது உண்மையா இல்லை பொய்யா என்று தெரியவில்லை. எனினும் இது போன்ற விசயங்களில் உஷாராக இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.