வால்நட்டை உடைப்பது மிகவும் கஷ்டமான விஷயம். ஆனால் இந்தியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தலையிலேயே 273 வால்நட்களை உடைத்து உலக சாதனை படைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் நவீன்குமார். தற்காப்புக் கலைஞரான இவர் உலக சாதனை படைப்பதற்காக வால் நட்டை உடைக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த முஹம்மது ரஷித் என்பவர் 254 வால்நட்களை உடைத்ததுதான் உலக சாதனையாக இருந்தது.
இதற்குமுன்பு முஹம்மது ரஷித்181 வால்நட்களை உடைத்து சாதனை படைத்திருந்தார். இந்த சாதனையை 2017ம் ஆண்டு நவீன்குமார் 217 வால்நட்களை உடைத்து முஹம்மது ரஷித் முறியடித்தார்.
அதன் பிறகு இருவரும் நேருக்கு நேராக மோதினர். இதில் முஹம்மது ரஷித் 254 வால்நட்களை உடைத்து உலகசாதனை படைத்தார். இந்த சாதனையைத்தான் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நவீன்குமார் முறியடித்துள்ளார்.
இவர் தலையில் வால்நட்களை உடைத்து உலக சாதனை படைக்கும் வீடியோ கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், தலையில் ரத்தம் சொட்டச் சொட்ட நவீன்குமார் 273 வாட்நட்களை உடைக்கும் காட்சிப் பதிவாகியுள்ளது. இந்த சாதனை வீடியோவை பார்த்த பலரும் நவீன்குமாருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.