மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது மலாட் என்ற பகுதி உள்ளது. இங்கு அமைந்திருக்கும் இரயில் நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரித்தே காணப்படும். இந்த சூழலில் அந்த இரயில் நிலையத்தின் 3-வது பிளாட் பார்த்தால் இளைஞர்கள் சிலர் காலை உணவு சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட பின் பிளாட்பார முணையில் நின்று கை கழுவினார்.
அப்போது அவருடன் மற்றொரு இளைஞரும் அதே பகுதியில் நின்று கை கழுவினார். இருவரும் அந்த பகுதியில் நின்றே எதிரே இருந்த தங்களது மற்ற நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் கவனிக்காத சூழலில், திடீரென பிளாட் பாரத்திற்கு வரவேண்டிய இரயில் வேகமாக வந்துள்ளது. அப்போது அங்கே நின்று கொண்டிருந்த 2 பேர் மீதும் அந்த இரயில் மோதியது.
இதில் ஒருவர் கீழே விழ, மற்றொருவரான அனில் சர்மா என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடலை மீட்ட அதிகாரிகள் உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.