உத்தர பிரதேச மாநிலம் உண்ணாவில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றுபவர் ரமேஷ் சந்திர சஹானி. அண்மையில் இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்று இவருக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அந்த புகைப்படத்தில், காவல்துறை அதிகாரி மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டுக்கட்டாக 500 ரூபாய் பணத்துடன் அமர்ந்திருக்கின்றனர். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி எப்படி ஒரு போலிஸ் அதிகாரியின் வீட்டில் இவ்வளவு பணம் வந்தது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் இந்த பணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்து வந்தது. இதனால் காவல்துறை பொறுப்பாளர் ரமேஷ் சந்திர சஹானி வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரிடத்தில் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலிஸ் அதிகாரிகள் கூறியுள்ளது.
இது குறித்துக் கூறும் ரமேஷ் சந்திர சஹானி, "எங்களது குடும்பச் சொந்தத்தை 2021ம் ஆண்டு விற்றோம். இதில் ரூ.14 லட்சம் கிடைத்தது. இந்த பணத்தை வைத்துத்தான் நாங்கள் குடும்பத்துடன் செல்ஃபி எடுத்தோம். முறைகேடாகப் பணம் எதுவும் நான் வாங்கவில்லை" என விளக்கம் அளித்துள்ளார்.