தம் எண்ணங்கள், கனவுகள், திறன் என மனிதனின் அனைத்தையும் தன்னுள் வைத்திருக்கும் அறிவு பொக்கிஷ கிடங்கு தான் நூலகங்கள். அத்தகைய நூலகங்கள் நாகரிக சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய திறவுகோள். ஒவ்வொரு தனி மனிதரின் ஆர்வத்திற்கும், தேடல்களுக்கும் வடிகாலாக விளங்குபவை நூலகங்களாகும். முன்னேறிய சமூகத்திற்கு பெரும் பங்களிப்பை நூலகங்கள் வழங்கி இருக்கின்றனர்.
இன்றைய சூழலில் நூலகங்களுக்குச் செல்லும் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதைவிட கூடுதலாக, இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைன் நூலகங்கள் மூலம் கிடைக்கும் நூல்களை படிப்போரின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. ஒருசில இடங்களில் இணையவழி நூலகங்களில் புத்தகங்கள் இலவசமாக கிடைத்தாலும், பெரும்பான இணைய நூலகங்களில் பணம் பெற்று படிக்கும் சூழலே இருக்கிறது.
இந்நிலையில், Internet Archive எனப்படும் இணைய ஆவணகம், இணையத்தில் செயல்படும் இலாப நோக்கற்ற எண்ணிம நூலகம் ( Digital Library ) ஆகும். brewster kahle பிரெவஸ்டர் காலே என்பவர் 1996ம் ஆண்டு இந்த இணைய ஆவணகத்தை தொடங்கியுள்ளார். மேலும் கலிஃபோர்னியா மாநிலம், சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பிரிசிடியோவில் இணைய ஆவணக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இவை, கலாச்சார, பண்பாட்டு படிவங்களைக் காப்பதற்கும் மிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. இணைய ஆவணகத்தின் சேகரிப்புகள் ஆய்வாளர்கள், வரலாற்றாசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்நூலகத்தில் உலகில் உள்ள பல இணைய நூலகங்களின் தொகுப்பும் கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, அமெரிக்க நூலகங்கள், கனேடிய நூலகங்கள், ஐரோப்பிய நூலகங்கள், நாசா புகைப்படங்கள், மருத்துவ பாரம்பரிய நூலகத்தின் ( The Medical Heritage Library ) நூற்தொகுப்பு, இறையியல் நூற்தொகுப்பு , சீன நூல்கள், இஸ்லாமிய புத்தகங்களின் தொகுப்பு என பல வகையான நூல்களின் தொகுப்பு இந்த இணைய ஆவணகத்தில் கிடைக்கின்றது.
அதுமட்டுமல்லாது, உலகின் பல்வேறு நூலகங்களிலிருந்து பெறப்பட்ட எண்மயமாக்கப்பட்ட நூல்களின் தொகுப்பும் இங்கு உள்ளது. மேலும், இணைய ஆவணகத்தின் மற்றொரு திட்டம் திறந்த நூலகம் (Open Library) ஆகும். பீட்டா நிலையில் உள்ள இத்திட்டத்தில், உலகில் வெளியான நூல்களின் பட்டியல், தகவல் தொகுப்புகள் இடம்பெறும்.
அதோடு இல்லாமல், திறந்த நூலகம் அனைவருக்கும் பொதுவானது, இலவசமும் ஆகும். இந்த திறந்த நூலங்களில் யார் வேண்டுமானலும் நூல்களின் விவரங்கள் மற்றும் தகவல்களை மாற்றி அமைக்காலாம். குறிப்பாக, இந்நூலகத்தில் உள்ள நூல்களில் ஏதேனும் தட்டச்சுப் பிழைகள் இருப்பின், அவற்றை திருத்தலாம், புதிதாக புத்தகங்களை பதிவேற்றலாம், தவறாக குறிப்புகள் இருப்பின் அவற்றை திருத்தலாம். புதிய தகவல்களுடன் கூடிய நிரல்பலகை ( widget ) சேர்க்கலாம் என்பதாகும்.
இந்த திறந்த நூலகத்தில் சுமார் 23 மில்லியனுக்கும் மேலான நூல்களின் விபரங்கள் கிடைக்கும். மேலும் இந்நூலகத்தில் தேவைப்படும் நூல்கள் file formats வடிவிலும் கிடைக்கும். இந்த திறந்த நூலகத்தின் நோக்கமே இதுவரை வெளியாகியுள்ள அனைத்து நூல்களுக்கும், ஒரு நூலுக்கு ஒரு வலைப்பக்கம் வீதம் உருவாக்குவதே ஆகும் என அதன் நிறுவன பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு உலகம் முழுவதும் முடங்கியது. அப்போது தங்களது பணியை நிறுத்தாத இணைய ஆவணகம் பொதுமக்களுக்கு தகவல் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், புது முயற்சியை மேற்கொண்டது.
அதாவது, இந்த இணைய ஆவணகத்தில் தொடங்கப்பட்ட திறந்த நூலகத்தில் உள்ள புத்தகத்தை வாங்க முடியவில்லை என்றால், நூலத்தில் எடுக்கும் படி விசிட் லிஸ்ட் காத்திருந்து புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். பின்னர் படித்துமுடித்த பின்னர் 4 அல்லது 5 நாட்களுக்குள் திரும்பி ஒப்படைக்கும் படி அமைக்கப்பட்டிருக்கும். அந்த புத்தகத்தை அச்சு எடுக்கவோ அல்லது டவுன்லோடு, காஃபி எடுத்து கொள்ளவோ முடியாது.
இந்நிலையில் கொரோனாவால் மக்களுக்கு புத்தங்கள் எளிதில் கிடைக்காது என்பதாலும், இதனால் மாணவர்கள், பட்டப்படிப்பு மேற்கொள்பவர்கள் என பலரும் பாதிக்கப்படுவார்கள் என்பதாலும் national emergency library என்பதை தொடங்கி, எந்த புத்தகத்தை வேண்டுமாலும், காத்திருப்பு இல்லாமலும், மேலும் எத்தனை முறை வேண்டுமாலும் படிக்கும் வசதியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
இந்த முயற்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருந்தபோதிலும், லாபம் மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் அமெரிக்காவின் மிகப்பெரிய புத்தக வெளியீட்டு நிறுவனங்களான, harpercollins, simon schuster macmillan மற்றும் penguin ஆகியோர் கூட்டாக சேர்த்து இணைய ஆவணகத்திற்கு எதிராக திருப்பினர். இது மிகப்பெரிய திருட்டு , இதனால் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் இணைய ஆவணகத்திற்கு எதிராக கிளம்பின. மேலும் இணைய ஆவணகத்திற்கு எதிராகவும் வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்கள்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் Fair law படி நடந்துக்கொள்ளவில்லை என்றும் காப்புரிமையை சுயநலத்திற்காக பயன்படுத்துவதாகவும் கூறி முதற்கட்ட விசாரணையின்போது காட்டமாக தெரிவித்திருக்கிறது. மேலும் இதில் முக்கியமாக டிஜிட்டல் லெண்டிங் ( Digital Lending) பெயரில் நிஜ புத்தகத்தை எடுத்து படிப்பதும், டிஜிட்டல் வடிவில் எடுத்து படிப்பதும் ஒன்று அல்ல எனத் தெரிவித்திருக்கிறது. இது தவறு என்றே நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் இணைய ஆவணகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த விவகாரத்தை நாங்கள் விட்டுக்கொடுக்கமாட்டோம் எனவும் தெரிவித்திருக்கிறது. ஆனால், வழக்கு இன்னும் வெகு தொலைவில் உள்ளது. இணைய காப்பகம் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. Internet Archive மேற்கொள்ளும் இந்த அத்தியாவசிய பொது சேவையை பாதுகாக்க, நாமும் தொடர்ந்து அதனுடன் கைகோர்த்து நிற்போம்!