வைரல்

சிறுநீர் கழிக்க முடியாமல் போகும் அரியவகை நோய்.. 14 மாதங்களாக தவித்துவரும் இளம்பெண்ணின் சோகப் பின்னணி !

அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இளம்பெண் ஒருவர் பல மாதங்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுநீர் கழிக்க முடியாமல் போகும் அரியவகை நோய்.. 14 மாதங்களாக தவித்துவரும் இளம்பெண்ணின் சோகப் பின்னணி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்த உலகில் பலவகையான உயிரினங்கள் உள்ளது. அதேபோல் பலவகையான நோய்களும் இருக்கிறது. அதில் பெரும்பாலானவை அனைவருக்கும் வரும் காய்ச்சல், சளி, தலைவலி போன்ற சாதாரணமானவையாகும். மேலும் சிலருக்கு புற்றுநோய், எய்ட்ஸ் என நோய்கள் இருக்கும். இதில் சிலவற்றை குணமாக்க முடியும்; சில முடியாது.

ஆனால் இதைவிட அரியவகை நோய்கள் என்று கணக்கெடுத்தால் தனியாக பட்டியலே இடலாம். அப்படித்தான் நடிகை சமந்தா, மம்தா மோகன்தாஸ், பூனம் கவுர் என அதிகமான நடிகைகள் தாங்கள் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அண்மையில் அனுஷ்கா கூட, தான் சிரிக்க தொடங்கினாள் விடாமல் 15 நிமிடம் சிரிக்கும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

சிறுநீர் கழிக்க முடியாமல் போகும் அரியவகை நோய்.. 14 மாதங்களாக தவித்துவரும் இளம்பெண்ணின் சோகப் பின்னணி !

இவையெல்லாம் ஒரு புறம் இருக்க, தற்போது பிரிட்டனை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வினோதமான மிகவும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது அந்த பெண்ணால் இயற்கையான முறையில் சிறுநீர் கழிக்க முடியவில்லையாம். மேலும் அந்த பெண் இதற்காக கருவி ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.

பொதுவாக மனிதர்களால் தங்கள் சிறுநீரை சராசரியாக ஒரு பெண்ணால் 500 மிலிட்டரும், ஆணால் 700 மிலிட்டர் சிறுநீரும் தான் அடக்கி வைக்க முடியும். ஆனால் இந்த பெண் பல நாட்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் தவித்து வந்துள்ளார்.

சிறுநீர் கழிக்க முடியாமல் போகும் அரியவகை நோய்.. 14 மாதங்களாக தவித்துவரும் இளம்பெண்ணின் சோகப் பின்னணி !

அதாவது பிரிட்டன் நாட்டை சேர்ந்தவர் எல் ஆடம்ஸ் (Elle Adams) என்ற 30 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவரும் நம்மை போல் ஆரம்ப காலத்தில் சாதாரண வாழ்க்கையைதான் வாழ்ந்து வந்துள்ளார். ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு ஒரு முறை வழக்கம்போல் காலை எழுந்து சிறுநீர் கழிக்க சென்றுள்ளார், ஆனால் அவருக்கு சிறுநீர் வரவில்லை.

மாறாக அவரால் சிறுநீர் கழிக்கவே முடியவில்லை. இதனால் பயந்துபோன அவர் நீர் சத்து நிறைந்த பழங்கள், தண்ணீர் என நீராதாரங்களை எடுத்துக்கொண்டார். அப்படியும் அவருக்கு வரவில்லை. இதனால் பயந்துபோன அந்த பெண் மருத்துவரை அணுகியுள்ளார்.

அங்கு அவரை சோதனை செய்தபோது, அவரது சிறுநீர் பையில் சுமார் ஒரு லிட்டர் சிறுநீர் தேங்கி இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அதனை உடனடியாக டியூப் செலுத்தி செயற்கை முறையில் மருத்துவர்கள் சிறுநீரை வெளியேற்றினர். ஏதோ பதற்றம் காரணமாக தான் இந்த பிரச்னை வந்துள்ளது யோகா செய்து நன்கு தூங்குங்கள் பிரச்னை சரியாகி விடும் என பெண்ணிடம் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இருப்பினும் அவருக்கு சரியாகாமல் இருந்ததால், தொடர்ந்து டியூப் மூலமே தனது சிறுநீரை வெளியில் எடுத்துள்ளார். இப்படியே பல மாதங்கள் நகர தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரை முழுமையாக சோதனை செய்தபோது அந்த பெண் Fowler's Syndrome என்ற அரியவகை நோயால் பாதிக்கப்ட்டுள்ளது தெரியவந்தது.

சிறுநீர் கழிக்க முடியாமல் போகும் அரியவகை நோய்.. 14 மாதங்களாக தவித்துவரும் இளம்பெண்ணின் சோகப் பின்னணி !

சுமார் 14 மாதங்கள் (1 வருடத்துக்கும் மேலாக) கழித்து அந்த பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நோய் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது தான் நலமாக உள்ளதாகவும் எல் தெரிவித்துள்ளார்.

Catheter என்று சொல்லப்படும் (டியூப் வைத்து சிறுநீரை வெளியேற்றும்) மருத்துவ முறைப்படி தனது சிறுநீரை வெளியேற்றி வரும் இவர் Sacral Nerve Stimulation என்ற சிகிச்சையை பெற்று வருகிறார். இந்த சிகிச்சை இவரது பிரச்னையை சற்று மேம்படுத்தி பாதிப்பை பாதியாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுநீர் கழிக்க முடியாமல் போகும் அரியவகை நோய்.. 14 மாதங்களாக தவித்துவரும் இளம்பெண்ணின் சோகப் பின்னணி !

Fowler's Syndrome என்பது ஒரு அரியவகை நோயாகும். இந்த நோய் பெரும்பாலும் பெண்களுக்கு அதுவும் இளம்பெண்களுக்கு காணப்படும். இந்த நோய் உள்ளவர்களால் சிறுநீரை இயற்கையான முறையில் கழிக்க முடியாது. இந்த நோய்க்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. எனினும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கடும் வேதனையை அனுபவிப்பர் என்று தெரிகிறது.

சிறுநீர் கழிக்க முடியாமல் போகும் அரியவகை நோய்.. 14 மாதங்களாக தவித்துவரும் இளம்பெண்ணின் சோகப் பின்னணி !

முன்னதாக 2017-ம் இதேபோல் இங்கிலாந்தில் கம்பரியா என்ற மாகாணத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவரும் இதே நோயால் பாதிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த நோயால் அந்த பெண் சுமார் 3 வருடங்கள் அவதிப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories