வைரல்

மைதானத்தில் பயிற்சியாளருக்கு மசாஜ் செய்யும் இளம் கிரிக்கெட் வீரர்.. வீடியோ வெளியானதால் பரபரப்பு !

உத்தர பிரதேசம், மைதானத்தில் வைத்து பயிற்சியாளருக்கு இளம் கிரிக்கெட் வீரர் ஒருவர் மசாஜ் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைதானத்தில் பயிற்சியாளருக்கு மசாஜ் செய்யும் இளம் கிரிக்கெட் வீரர்.. வீடியோ வெளியானதால் பரபரப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

உத்தர பிரதேச மாநிலத்தில் டியோரியா என்ற பகுதியில் அமைந்துள்ளது ரவீந்திர கிஷோர் ஷாகி ஸ்போர்ட்ஸ் மைதானம். இங்கு வீரர்களுக்கு பயிற்சியாளராக பணிபுரிந்து வருபவர் அப்துல் அஹத். இவர் அங்கு பயிற்சியாளராக மட்டுமல்லாமல் வார்டனாகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயிற்சியாளர் அப்துல் அஹத், அங்கு இருக்கும் வீரர் ஒருவரை தனக்கு மசாஜ் செய்யுமாறு கூறியுள்ளார். அந்த வீரரும் இவருக்கு மசாஜ் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. மேலும் அந்த வீடியோவில், பயிற்சியாளர் மைதானத்தில் உள்ள ஓய்வு அறையில் உள்ள படுக்கையில் படுத்திருக்கிறார். இந்த வீரரோ, அவரது முதுகில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து விடுகிறார்.

மைதானத்தில் பயிற்சியாளருக்கு மசாஜ் செய்யும் இளம் கிரிக்கெட் வீரர்.. வீடியோ வெளியானதால் பரபரப்பு !

இந்த வீடியோ வெளியாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. இதைத்தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு சஸ்பெண்ட் செய்யப்பட்ட அப்துல், இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்தில், லக்னோவில் உள்ள பிராந்திய அலுவலகத்தில் தனது அறிக்கையை செய்வார் என்றும், இதற்கு விளையாட்டுத்துறை துணை இயக்குனரான ஆர்.என்.சிங்கை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டு இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பூதாகரமான நிலையில், பாதிக்கப்பட்ட வீரரிடம் விசாரணை செய்தனர். அப்போது அவர் பயிற்சியாளருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். அதோடு தன்னை பயிற்சியாளர் தவறான வார்த்தைகளால் திட்டியதாகவும், மசாஜ் செய்யும்படி கட்டாயப்படுத்தியதாகவும் கூறினார். மேலும் தன்னை தனது வீட்டிற்கு செல்ல விடவில்லை என்றும், தனது தந்தையுடன் பேச விடவில்லை என்றும் வீரர் புகார் தெரிவித்தார்.

மைதானத்தில் பயிற்சியாளருக்கு மசாஜ் செய்யும் இளம் கிரிக்கெட் வீரர்.. வீடியோ வெளியானதால் பரபரப்பு !

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து குற்றம்சாட்டப்பட்ட பயிற்சியாளர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், "பேட்மிண்டன் விளையாடும்போது விழுந்து முதுகில் காயம் ஏற்பட்டது. அதில் எனக்கு முதுகு பகுதியில் அதிகமாக வலி எடுத்தது. எனவே அந்த வீரரிடம் மசாஜ் செய்துவிடும் படி கேட்டுக் கொண்டேன். அவரின் விருப்பப்பட்டு தான் அதை செய்தார். ஆனால் அதனை யார் வீடியோவாக பதிவு செய்தார்கள் எனத் தெரியவில்லை" என்றார்.

இது தற்போது பெரும் வைரலாகி பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories