வைரல்

மேம்பாலத்தில் இருந்து கட்டுக் கட்டாக பணத்தை வீசிய தொழிலதிபர்.. காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸ்!

பெங்களூருவில் மேம்பாலத்தில் இருந்து பணத்தை வீசிய நபரை போலிஸார் கைது செய்தனர்.

மேம்பாலத்தில் இருந்து கட்டுக் கட்டாக பணத்தை வீசிய தொழிலதிபர்.. காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நம்முன் திடீரென பணமழை பெய்தால் எப்படி இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் பெங்களூருவில் நடந்துள்ளது. பெங்களூருவில் உள்ள கே.ஆர். மார்க்கெட்டி அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்த ஒரு நபர் திடீரென கட்டுக்கட்டாக பணத்தை வீசியுள்ளார்.

அப்போது மேம்பாலத்திற்கு கீழே வாகனத்தில் சென்றவர்கள் தங்கள் முன் பணமழை கொட்டுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிறகு பறந்து வந்த அந்த பணத்தைப் பலரும் பிடித்து எடுத்துக் கொண்டனர். மேலும் அவரிடம் பலரும் பணம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் கையில் கொடுக்காமல் பணத்தை வீசியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், மேம்பாலத்தில் காரில் வந்த நபர் ஒருவர் திடீரென காரை நிறுத்திவிட்டு வெளியே வந்து தனது பையில் இருந்து பணத்தைக் கீழே வீசுகிறார். இதை அங்கிருந்த பொதுமக்கள் பிடித்துக் கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.

மேம்பாலத்தில் இருந்து கட்டுக் கட்டாக பணத்தை வீசிய தொழிலதிபர்.. காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த போலிஸ்!

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து அந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதில் பணத்தை வீசியவர் பெயர் அருண் என்றும் தொழிலதிபராக இருக்கும் இவர் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருவதும் தெரிந்தது.

மேலும் இவர் மேம்பாலத்தில் இருந்து ரூ.4000ம் வரை பணத்தை வீசியதாக போலிஸாரிடம் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இப்படிச் செய்ததாக அருண் போலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலிஸார் அருண் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories