வைரல்

தேங்காயா? இளநீரா?... பாவம் அவங்களே குழம்பிட்டாங்க: பா.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தால் எழுந்த சிரிப்பலை!

விழுப்புரத்தில் பா.ஜ.க விவசாய அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் அப்பகுதி மக்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தேங்காயா? இளநீரா?... பாவம் அவங்களே குழம்பிட்டாங்க:  பா.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தால் எழுந்த சிரிப்பலை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க கட்சியைச் சேர்ந்தவர்கள் தாங்கள் எந்த கோரிக்கைக்காக போராடுகிறோம் என்பது கூட தெரியாமல் வந்தோம், கத்தினோம், கலைந்து சென்றோம் என்பதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.

எதற்காக நீங்கள் போராடினீர்கள் என்று கேட்டால், 'ஒரு நிமிடம் அப்படியே தலை சுற்றிடிச்சு' என ரஜினி சொன்ன நிலைதான் இவர்களுக்கும் இருக்கும். கடந்த ஆண்டு புதுச்சேரியில் பா.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தனது சொந்த கட்சிக் கொடியையே தீயில் எரித்தனர்.

தேங்காயா? இளநீரா?... பாவம் அவங்களே குழம்பிட்டாங்க:  பா.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தால் எழுந்த சிரிப்பலை!

அந்த அளவிற்கு இவர்களுக்குக் கட்சியின் கொடியின் நிறத்தை கூட தெரியாமல் இருக்கின்றனர். தொண்டர்கள்தான் இப்படி என்றால் தலைவர்கள் இவர்களுக்கு மேல இருக்கிறார்கள். வாய் திறந்தாலே 'பொய் உருட்டுகள்'தான் வெளியே வருகிறது.

அதிலும் தமிழ்நாட்டுத் தலைவர் அண்ணாமலை அவர்கள் எப்போதும் பொய் மட்டுமே பேசுபவராக இருந்து வருகிறார். அவர் பேசுவதற்கு ஆதாரம் கேட்டால் ஆவேசப்பட்டு பத்திரிகையாளர்களை மிரட்டுவதை வாடிக்கையாகவே வைத்துள்ளார்.

தேங்காயா? இளநீரா?... பாவம் அவங்களே குழம்பிட்டாங்க:  பா.ஜ.க நடத்திய ஆர்ப்பாட்டத்தால் எழுந்த சிரிப்பலை!

இந்நிலையில், விழுப்புரத்தில் பா.ஜ.க விவசாயிகள் அணியினர் பொங்கல் பரிசுத்தொகுப்பில் தேங்காய் வழங்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்த பொதுமக்களுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

என்ன நம்மைப் பார்த்து பொதுமக்கள் சிரிந்து கொண்டே செல்கிறார்கள் என்று ஒற்றும் புரியாமல் பா.ஜ.க தொண்டர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டே இருந்தனர்.

பின்னர்தான் அவர்களுக்கு நமது கையில் தேங்காய்க்குப் பதில் இளநீர் இருப்பதே மண்டைக்கு உரைத்தது. இருப்பினும் 'மீசையில் மண் ஒட்டாத' கதையாகக் கத்தி விட்டு அங்கிருந்து நைசாக நடந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories