வைரல்

உங்களுக்கு 90s கிட்ஸ்கள் தெரியும்.. ஆனால் Generation Z பற்றி நீங்க கேள்விப்படிருக்கிறீர்களா?

996ம் ஆண்டு முதல் 2012க்குள்ளான இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களை ஜெனரேஷன் ஸீ என்கிறார்கள். இந்த தலைமுறையில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.

உங்களுக்கு 90s கிட்ஸ்கள் தெரியும்.. ஆனால் Generation Z பற்றி நீங்க கேள்விப்படிருக்கிறீர்களா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Generation Z கேள்விப்படிருக்கிறீர்களா?

996ம் ஆண்டு முதல் 2012க்குள்ளான இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களை ஜெனரேஷன் ஸீ என்கிறார்கள். இந்த தலைமுறையில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இவர்களை Digital Natives என அழைக்கின்றனர். அதாவது டிஜிட்டல் பூர்வக்குடிகள் எனலாம்.

இணையம் மற்றும் சமூகதளம் மட்டுமே இவர்களின் வாழ்க்கையாக இருக்கின்றன. டிஜிட்டலில் வளரும் முதல் தலைமுறை இவர்கள் என்பதால் டிஜிட்டல் பூர்வக்குடிகள் என்கின்றனர். இணையம் அல்லது சமூகதளம் அல்லது டிஜிட்டல் வழிகளுக்கு முன் இருந்த சமூகத்தின் வரலாற்றை முழுமையாக இவர்கள் தெரிந்து கொள்வதும் தெரிந்து கொள்ள விரும்புவதும் கூட இருக்கும் வாய்ப்பில்லை என்கின்றனர்.

இதுவரையிலான தலைமுறைகளிலேயே மனப் பதற்றமும் மனச்சோர்வும் அதிகமாக இருக்கும் தலைமுறை இதுதான். தூக்கப் பற்றாக்குறை கொண்டிருப்பார்கள். ADHD போன்ற கவனக்குறைபாடு அதிகம் இருக்கும். Cognitive Thinking எனப்படும் பகுத்தறிவு சார் சிந்தனை குறைவாக இவர்களுக்கு இருக்குமெனவும் சொல்லப்படுகிறது. ‘கிட்டப்பார்வை’ சிக்கல் கொண்டிருப்பார்கள்.

உங்களுக்கு 90s கிட்ஸ்கள் தெரியும்.. ஆனால் Generation Z பற்றி நீங்க கேள்விப்படிருக்கிறீர்களா?

சமூகரீதியாக தனிமையில் உழலுவார்கள். ஜப்பான் நாட்டிலும் தென்கொரிய நாட்டிலும் இருக்கும் இளைஞர்களின் தனிமைச் சிக்கல் இத்தலைமுறையின் பிரத்தியேகதை. பெற்றோரின் தலையீட்டை சுதந்திரம் பறிக்கும் விஷயமாக பார்ப்பார்கள். சமூகம் கொடுக்கும் அழுத்தத்தில் ஒடுங்குவார்கள்.

வாசிப்பு குறைவாகவே இருக்கும் நுனிப்புல் மேய்வதே பெரும்பாலானோரின் வாசிப்பாக இருக்கும். சமூகத்தின் செய்திகளை அவர்கள் தெரிந்து கொள்ளும் இடம் சமூகதளங்களாகவே இருக்கும். எந்த ஒரு சமூக ஆளுமையின் உரையையும் சுருக்கி சில நிமிடங்களில் வரும் சமூகதளச் செய்திகளே அவர்களின் பிரதான சிந்தனைக்களமாக இருக்கும். சுலபமாக எவரையும் cancel செய்வார்கள். Meta Narrative-களில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

உங்களுக்கு 90s கிட்ஸ்கள் தெரியும்.. ஆனால் Generation Z பற்றி நீங்க கேள்விப்படிருக்கிறீர்களா?

எனவே அடிப்படையில் இதுவரை நாம் பார்த்த அரசியல், சிந்தனைமுறை, வாழ்க்கை, விழுமியங்கள் எதுவும் இவர்களின் வாழ்க்கையில் இருக்கப் போவதில்லை.

பெரும்பாலான கணக்கெடுப்புகள் இத்தலைமுறையை சேர்ந்தவர்கள் இடது அரசியல் சாய்மானத்தைக் கொண்டிருப்பார்கள் என்கிறது. இவர்கள் அனைவருக்கும் அரசாங்கம் மற்றும் இருக்கும் அமைப்பில் திருப்தி இருக்காது என்கிறார்கள்.

இவர்களின் அரசியலும் போராட்டங்களும் விந்தையாகத்தான் இருக்கப் போகிறது. உதாரணம் வேண்டுமெனில் காலநிலை மாற்றத்துக்கு எதிராக களம் கண்ட மாணவி க்ரெட்டா துன்பெர்க்கை பார்த்துக் கொள்ளுங்கள். பள்ளியில் போட்டுக் காட்டப்பட்ட காலநிலை ஆவணப்படங்களை பார்த்துவிட்டு தூக்கமின்றி தவித்து, ‘அழிந்துவிடுவோம்’ என்கிற மனப்பதற்றம் கொண்டு, பள்ளியின் வாசலில் அமர்ந்து காலநிலை மாற்றத்தை சரி செய்யக் கோரும் போராட்டத்தை தொடங்கியவர். அவர் ஆடிசம் குறைபாடான Asperger Syndrome கொண்டவர்.

உங்களுக்கு 90s கிட்ஸ்கள் தெரியும்.. ஆனால் Generation Z பற்றி நீங்க கேள்விப்படிருக்கிறீர்களா?

உலகத்திலேயே முதன்முறையாக மூலதனத்தின் அதீத சுரண்டலுக்கு எதிரான போராட்டச் சிந்தனை மரபணு வழியாக திரட்டப்படும் தலைமுறையாக Generation Z-யைப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் கூட இளையோர்தான் பெரும் போராட்டங்களை வழி நடத்தி மாற்றங்களை நிகழ்த்தியிருக்கின்றனர்.

எனவே நம்பிக்கை இழக்காதீர்கள். மாற்றத்துக்கான காலம் இன்னும் இருக்கிறது. ஆனால் மாற்றம் நாம் எதிர்பார்த்திருந்த வடிவத்தில் இருக்காது.

banner

Related Stories

Related Stories