இன்றய நவீன தொழில்நுட்ப காலக்கட்டத்தில் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கும் நிலைமை குறைந்துள்ளது. மேலும் இதற்காகத் தொடங்கப்பட்ட இணையதளம் பல நேரங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டாலும் அவை உடனே சரிசெய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிடுகிறது.
அந்தவகையில் இந்தியாவில் ரயில் டிக்கெட் முன்பதிவு செயலியில் முன்னணி செயலியாக செயல்படுகிறது ட்ரெய்ன் மேன் நிறுவனம் (Trainman App). பல வாடிக்கையாளர்களை கொண்டுள்ள இந்தநிறுவனம் அவ்வபோது, பல சலுகைகளை வாடிக்கையாளருக்கு வாரி வழங்கி வந்தது.
இந்நிலையில் தற்போது, ‘ட்ரிப் அஷ்யூரன்ஸ்’ என்று சிறப்பு அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், ட்ரெயின்மேன் செயலியில் ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, கொடுக்கப்பட்ட கணிப்பு மீட்டரில் குறிப்பிடப்பட்டுள்ள சதவீத மதிப்பெண்ணைப் பெறுவதன் மூலம், காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணி தனது பயணத்திற்கான உத்தரவாதமான வழியைப் பெறுவதற்கான வசதியை மேற்கொள்கிறது.
அதாவது, கணிப்பு மீட்டர் 90% அல்லது அதற்கு மேல் இருந்தால், பயண உத்தரவாதக் கட்டணம் ரூ.1 ஆகவும், 90 சதவீதத்திற்குக் குறைவாக இருந்தால், டிக்கெட்டின் வகுப்பைப் பொறுத்து பெயரளவு கட்டணம் வசூலிக்கப்படும். சார்ட் தயாரிக்கும் போது ரயில் டிக்கெட் உறுதி செய்யப்பட்டால், பயண உத்தரவாதக் கட்டணம் மீண்டும் கணக்கில் திருப்பித் தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை என்றால், கூடுதல் கட்டணமின்றி பயணிகளுக்கு ட்ரெயின்மேன் செயலியானது இலவச விமான டிக்கெட்டை வழங்குகிறது. ஆம், நீங்கள் முற்றிலும் இலவச விமான டிக்கெட்டில் பயணத்தை தடையின்றி தொடரலாம்.
‘டிரிப் அஷ்யூரன்ஸ்’ க்கு வெறும் 1 ரூபாய் முதல் பெயரளவிலான கட்டணம் வசூலித்தல் மற்றும் தற்போது அனைத்து ராஜதானி ரயில் உட்பட சுமார் 130 ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதன் மூலம் இந்த சலுகையைப் பெறலாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, “"நீங்கள் காத்திருப்புப் பட்டியலில் உள்ள டிக்கெட்டை சார்ட் தயாரிக்கும் போதும் காத்திருப்புப் பட்டியலில் வைத்திருந்தால், அதே பயணத்திற்கான உறுதிப்படுத்தப்பட்ட விமான டிக்கெட்டை ட்ரெயின்மேன் உங்களுக்கு வழங்கும்" என்று ட்ரெயின்மேனின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ட்ரெயின்மேன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி வினீத் சிரானியா கூறுகையில், “பயணத்தை முற்றிலும் தொந்தரவில்லாத அனுபவமாக மாற்றுவதற்காக இந்த தயாரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. 94% துல்லியத்துடன், காத்திருப்புப் பட்டியலிடப்பட்ட டிக்கெட்டை உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுடன் என்றும் நாங்கள் முன்னோடியாக இருக்கிறோம்.
உண்மையில், ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படாதபோது, 'டிரிப் அஷ்யூரன்ஸ்' கீழ் விமான டிக்கெட்டை வழங்குவோம், ஆனால் இது விமான நிலையங்களைக் கொண்ட நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும். மொத்தத்தில், இந்தியாவில் உள்ள ரயில் பயணிகளுக்கு தடையற்ற ரயில் பயண அனுபவத்தை வழங்குவதற்காக எங்கள் ஆன்லைன் தளத்தை மேம்படுத்துவதில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்,” என்று கூறினார்.