வைரல்

சிங்கப்பூர் To அண்டார்டிகா : 30,000 கி.மீ பயணம் செய்து உணவு டெலிவரி..சாதனை படைத்த சென்னை மாணவி !

சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகாவுக்கு உணவு டெலிவரி செய்து சென்னையில் படித்த பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

சிங்கப்பூர் To அண்டார்டிகா : 30,000 கி.மீ பயணம் செய்து உணவு டெலிவரி..சாதனை படைத்த சென்னை மாணவி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2018-ம் ஆண்டு சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்த மானசா கோபால் என்பவர் காலநிலை மாற்றத்தை கண்டித்து உருவான குழுவில் இணைந்து இதற்கு முன்னரே அண்டார்டிகா சென்றுள்ளார்.

இந்த நிலையில், தற்போது சிங்கப்பூரில் வசித்துவரும் மானசா கோபால் காலநிலை மாற்றத்தால் உலகின் முக்கியமான கண்டமான அண்டார்டிகா பாதிக்கப்படுவதை உலகுக்கு உணர்ந்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.அதற்காக வித்தியாசமான யோசனையை முன்னெடுத்த இவரின் செயல் தற்போது வைரலாகி வருகிறது.

சிங்கப்பூர் To அண்டார்டிகா : 30,000 கி.மீ பயணம் செய்து உணவு டெலிவரி..சாதனை படைத்த சென்னை மாணவி !

விழிப்புணர்வுக்காக அண்டார்டிகா செல்ல இவருக்கு உதவ பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Foodpanda நிறுவனம் முன்வந்துள்ளது. மேலும், ஒரு விளம்பரமாக இதனை மாற்றவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி அண்டார்டிகாவில் உள்ள ஒருவருக்கு உணவை டெலிவரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் ஏறி ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரை சென்றடைந்த மானசா பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் அயர்ஸுக்கு சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து அண்டார்டிகாவுக்கு சென்று உணவை டெலிவரி செய்துள்ளார்.

இதற்காக 30,000 கிலோமீட்டர்கள் மற்றும் நான்கு கண்டங்களுக்கு மேல் பயணித்து மானசா சாதனை படைத்துள்ளார். இது ஒரு உலகசாதனையாகவும் கருதப்படுகிறது. இது தொடர்பான வீடியோவை மானசா சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட நிலையில், அது வைரலாகியுள்ளது.

இந்த காணொளியை சுமார் 38,000க்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் பல்வேறு தரப்பில் இருந்து Foodpanda நிறுவனத்துக்கும் மனசாவுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. ஆனால், இந்த பயணத்துக்கான செலவு குறித்து எந்த விவரமும் தெரிவிக்கப்படவில்லை.

banner

Related Stories

Related Stories