கார்ட்டூன் என்ற உலகத்தை 90ஸ், 2k கிட்ஸ்களுக்கு அறிமுகம் செய்தது கார்ட்மூன் நெட்வொர்க் சேனல்தான். அதிலும் 90ஸ் கிட்ஸ்களை கார்டூன் பைத்தியமாக்கியதும் இந்த சேனல்தான்.
இப்போது சிறுவர்களை செல்போனில் பலவிதமான கார்டூன்களை பார்க்கிறார்கள். அதுவும் எப்போது வேண்டுமானாலும் பார்க்க முடியும். ஆனால் 90ஸ் கிட்ஸ்களின் காலத்தில் அப்படி இல்லை. வீட்டில் இருந்த ஒரே டி.வி பெட்டியில் எந்த நேரத்தில் எந்த கார்ட்டூன் வரும் என்பதை அறிந்து, அதைபார்க்க சண்டை கட்டிக் கொண்டு ஓடி ஓடி ஸ்கூபி-டூவையும், டாம் அண்ட் ஜெர்ரியையும் பார்த்த காலம் அது. இப்போது இந்த கார்ட்டூன் தொடர்களை யாராலும் மறக்க முடியாது.
பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த உடன் முதலில் கார்டூன்சேனை பார்த்து வளர்ந்த கூட்டம் தான் இந்த 90ஸ் கிட்ஸ். அதன் நீட்சிகள் தான் 2k கிட்ஸ் எல்லாம். இதன்பிறகு சுட்டி வீடி போன்ற பல கார்டூன் சேனல்கள் வரதொடங்கியது. தற்போது நிறைய கார்டூன் சேனல்கள் தொலைக்காட்சிகளில் உள்ளது. ஆனால் அப்போதும் சரி இப்போதும் சரி ஆல் டைம் பேவரைட் என்றால் அது கார்டூன் நெட்வொர்க் சேனல்தான்.
இப்படி 30 ஆண்டுகளாக கார்டூன் உலகத்தில் கொடிகட்டி பறந்து வரும் கார்டூன் நெட்வொர்க் சேனல் தனது சேவையை நிறுத்திக் கொள்ளப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்குக் காரணம் இந்நிறுவனத்தின் அனிமேஷன் பிரிவிலிருந்து 82க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையை விட்டு அனுப்பட்டுள்ளதால் சேலை மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை அடுத்து கார்டூன் நெட்வொர்க் சேனலுக்கு ஆதரவாக 90ஸ் மற்றும் 2k கிட்ஸ்கள் சமூகவலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். தங்களுக்குப் பிடித்த கார்டூன் தொடர்களை நினைவூட்டி கார்டூன் நெட்வொர்க் சேனலுக்கு விடைகொடுத்து வருகின்றனர்.