கர்நாடகா மாநிலம், பத்ராவதி பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு நாகப் பாம்புகள் புகுந்துள்ளதாக பாம்புப்பிடி வீரர் அலேக்ஸ் மற்றும் ரோனி ஆகியோருக்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து இவர்கள் இருவரும் அங்குச் சென்று பாம்பைப் பிடித்துள்ளனர். அப்போது ஒரு பாம்புக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 2 பாம்பையும் வனப்பகுதியில் விடுவதற்காக எடுத்துச் சென்றனர்.
அப்போது, எந்த பாம்பிற்கு அடி பட்டது என்று ரோனி பார்த்தபோது அவரை பாம்பு தாக்க முயன்றது. இதையடுத்து அலெக்ஸ் அந்தப் பாம்பை எடுத்து இதன் பின்னால் இருந்து முத்தமிட முயற்சி செய்தபோது அவரது உதட்டைக் கடித்துள்ளது. உடனே அவர் பாம்பை கையிலிருந்து விடுவித்துள்ளார்.
இதையடுத்து ரோனி பாம்பைப் பிடித்து பாட்டிலில் அடைத்துள்ளார். பின்னர் அலெக்ஸை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் மூன்று நாள் சிகிச்சைக்குப் பிறகு அலெக்ஸ் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில்தான் அலெக்ஸை பாம்புக் கடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.