உத்தர பிரதேச மாநிலம், போபாடா கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய். இவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
அப்போது மருத்துவர்கள் அவரது வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது விசித்திரமாக சில பொருட்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு அறுவை சிகிச்சை செய்துதான் அதை வெளியேற்ற முடியும் என விஜயிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர் அறுவை சிகிச்சைக்கு விஜய் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்தபோதுதான் அவரது வயிற்றிலிருந்து ஸ்பூன் என்பது மருத்துவர்களுக்குத் தெரிந்தது.
மேலும் அதில் ஸ்பூன் தலையில்லாத வெறும் பிடி மட்டுமே இருந்துள்ளது. பின்னர் வயிற்றிலிருந்து ஸ்பூன்களை ஒவ்வொன்றாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். விஜய் வயிற்றிலிருந்து 62 ஸ்பூன்களை மருத்துவர்கள் 2 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழுமையாக வெளியே இருந்துள்ளனர்.
தற்போது, அறுவை சிகிச்சைக்கு பிறகு விஜய் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விஜய் தனக்குப் பசி எடுக்கும்போது உணவு கிடைக்காவிட்டால் ஸ்பூன்களை சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்துள்ளார். இப்படி ஒருவருடம் அவர் ஸ்பூன் சாப்பிட்டு வந்துள்ளதாக மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.