உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நான்கு சாமியார்கள் கர்நாடகா மாநிலத்திலுள்ள பிஜாப்பூர் பகுதியில் இருந்து காரில் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மகாராஷ்டிரா மாநிலம், லவனா என்ற கிராமத்திலுள்ள கோயிலுக்கு பயணித்தனர்.
அப்போது அங்கிருந்த கிராம மக்களிடம் தங்களுக்கு பணிவிடை செய்ய சிறார்களை அனுப்புமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அக்கிரம மக்கள், அந்த 4 சாமியார்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் அவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சி செய்வதாக எண்ணி வாகனத்தில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து பெல்ட், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் அவர்கள் வலியால் கத்தி கூச்சலிட்டுள்ளனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலானதை அடுத்து, காவல்துறை அவர்களை பிடித்து விசாரித்தனர்.
இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், "இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை. 4 சாமியார்களின் அடையாள அட்டைகளை வைத்து விசாரித்ததில் அவர்கள் உண்மையை கூறுவதாக தான் தெரிகிறது. இந்த சம்பவம் நடந்ததால் அவர்கள் மீண்டும் தங்களது ஊரான உத்தர பிரதேசத்திற்கே செல்ல விரும்புகின்றனர்" என்றனர்.