நாசாவால் அனுப்பட்ட உலகின் மிகவும் சக்தி வாய்ந்த திறன் கொண்ட ‘ஜேம்ஸ் வெப்’ விண்வெளி தொலைநோக்கி, பிரெஞ்ச் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியர் 5 ராக்கெட் மூலம் கடந்த டிசம்பரில் விண்ணில் ஏவப்பட்டது.
இந்திய மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல ஆண்டுகள் தயாரிப்பு பணியில் உருவாக்கப்பட்டது. இந்த தொலைநோக்கி நிலவில் இருந்து மூன்று மடங்கு தொலைக்குச் சென்று, சூரியனை சுற்றியவாறு தனது ஆய்வுப்பணியை மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது.
மேலும் பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரத்தை கண்டுபிடிக்கும் சக்திகொண்ட இந்த தொலைநோக்கி நவீன மனித குலம் முன்பு அறிந்திடாத பல முக்கிய தகவல்களை விரைவில் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதனொரு பகுதியாக தற்போது, ஜேம்ஸ் வெம் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுப்பட்ட புகைப்படங்களை வெளியிடும் நிகழ்வு விரைவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன் முனோட்டமாக ஜேம்ஸ் வெம் விண்வெளி தொலைநோக்கி மூலம் பதிவு செய்யப்பட்ட முதல் விண்வெளிப்படத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மூலம் வெளியிட்டுள்ளது நாசா.
அந்தப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.