அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெல் ஃப்ரைஸ் என்ற உணவகம் உள்ளது. இங்கு நேற்று மூன்று இளம் பெண்கள் வந்துள்ளனர். இவர்கள் பீட்சா, பர்கர், சிக்கன் நூடுல்ஸ் ஆகியவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்னர்.
அப்போது இந்த உணவுக்காக உடன் கொடுக்கப்பட்ட சாஸ் தீர்ந்து போயுள்ளது. இதனால் இவர்கள் மீண்டும் சாஸ் கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளனர். பின்னர் இவர்கள் சாப்பிட்ட முடித்து பிறகு அவர்களுக்கு பில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பில்லை கண்டதும் பெண்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதில் எக்ட்ராவாக சாங்கி சாப்பிட்ட சாஸ்க்கு இந்திய மதிப்புபடி ரூ.138 சேர்க்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பெண்கள் கடையிலிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் பதிலை ஏற்றுக்கொள்ளாத பெண்கள் அங்கிருந்த நாற்காலிகளை எடுத்து காசாளர் அறை மீது வீசியெறிந்துள்ளனர். மேலும் காசாளர் மேஜையில் இருந்து கணினிகளை அடுத்து நொறுக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து போலிஸார் மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்களைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.