பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை கூர்மையாக விமர்சிப்பவர்களில் நடிகர் பிரகாஷ் ராஜூம் ஒருவராவார். மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி போன்ற இடங்களில் ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வ லங்கள் பெயரில் இஸ்லாமியர்க ளின் வீடுகள், கடைகள் இடிக்கப்பட்டன.
அப்போது, “சிலைகள் அமைக்கப்படுகின்றன. வீடுகள் இடிக்கப்படுகின்றன. மக்கள் பேசா விட்டால் கூடிய விரைவில் நாட்டையும் பா.ஜ.க-வினர் அழித்து விடுவார்கள்” என்று நடிகர் பிரகாஷ் ராஜ், தனது கருத்தை துணிச்சலாக வெளிப்படுத்தினார்.
மேலும், ஒருமுறை “பிரதமர் மோடி தேநீர் விற்றதை நம்புகிறார்கள், நாட்டை விற்பதை நம்ப மறுக்கிறார்கள்” என்று குறிப்பிட்ட அவர், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை விஷயத்தில் ஒன்றுமே நடக்காதது போல பிரதமர் மோடி காட்டிய மவுனத்தை விமர்சிக்கும் வகையில், “பிரதமர் மோடி என்னை விட மிகச்சிறந்த நடிகர்” என்று காட்டமாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை ‘உச்ச நடிகர்’ என்று மீண்டும் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில் சாலையில் கிடந்த காலி குடிநீர் பாட்டில்களை எடுத்து தூய்மைப் பணியில் ஈடுபட்டது போன்ற புகைப்படங்களை பா.ஜ.க-வினர் சமூக வலை தளங்களில் வைரலாக்கி வந்தனர்.
எவ்வளவு எளிமையான, நாட்டிற்காக உழைக்கும் பிரதமர் கிடைத் துள்ளார் பாருங்கள்.. என்று பா.ஜ.க-வினர் வழக்கம்போல மோடி துதியில் ஈடுபட்டு வந்தனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிரகாஷ் ராஜ், அந்த படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, “கேமிரா வை கையாள்வதில் நமது உச்ச நடிகர் மற்றும் இயக்குநரை யாரும் மிஞ்ச முடியுமா?” என்று கடுமையாக கிண்டலடித்துள்ளார்.