வாடிக்கையாளர்கள் வணிகத் தளங்கள் போன்ற இடங்களில் டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகள் கொடுத்து பொருட்கள் வாங்கும்போது, வாடிக்கையாளரின் டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகள் பற்றிய தகவல்களை சில வணிகத் தளங்களில் சேமிக்கப்படுகிறது.
இந்த தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.இதன் காரணமாக வணிகத் தளங்கள் வாடிக்கையாளரின் டெபிட் மற்றும் கிரேடிட் கார்டுகள் பற்றிய தகவல்களை சேமிக்க கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
அதோடு கார்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய டோக்கனைஷேசன் எனும் புதிய முறையினை அறிமுகப்படுத்துவதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த புதிய முறையின்மூலம், பொருட்கள் வாங்கும்போது கார்டு பற்றிய தகவலைக் கேட்டால் அதற்கு டோக்கனைஷேசன் முறையின் மூலம் தற்காலிக மாற்று எண் உருவாக்கப்பட்டு பணப் பரிவர்த்தனை செய்யப்படும்.
இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிக பாதுகாப்பு கிடைத்து அவர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த டோக்கனக்ஷேசன் முறை என்பது உள்நாட்டு வணிகத்திற்கு மட்டுமே பொருந்தும் எனவும், வெளிநாட்டு பணப்பரிவர்தனைக்கு இது பொருந்தாது எனவும், இந்த வசதியை பயன்படுத்துவது வாடிக்கையாளரின் விரும்பம் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது