ரஷ்ய போலிஸாரை தொடர்பு கொண்ட ஒரு பெண் தனது தோழி நீண்ட நாட்களாக அலுவலகத்துக்கு வரவில்லை எனவும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் புகாரியளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் சம்மந்தப்பட்ட பெண்ணின் வீட்டுக்கு விசாரணை நடத்தச் சென்றுள்ளனர். அப்போது அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
அந்த பெண்மணியை அவர் வளர்ந்த 20 பூனைகளே கொன்று அவரின் உடலை தின்றுள்ளது. கிட்டத்தட்ட இரண்டு வாரம் இறந்த நிலையிலேயே பூனைகள் சூழ அவர் உடல் கிடந்துள்ளது.
பின்னர் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதில், அந்த பெண் வீட்டில் 'Maine Coon cat' வகையை சேர்ந்த 20 பூனைகளை வளர்ந்து வந்துள்ளார். வேலை காரணமாக அந்த பெண் வெளியே சென்றதால் இரண்டு வாரங்களாக அந்த பூனைகளுக்கு அதன் உரிமையாளர் எந்த உணவும் கொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்த சூழலில் வீடு திருப்பிய அவரை கொடூர பசியில் இருந்த அவரது பூனைகள் கொன்று அவர் உடலை உண்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அந்த பெண் இறந்த பின்னரும் பூனைகள் அவர் உடலை தின்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதில் சில பூனைகளின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் நலமாக இருந்த சில பூனைகள் வேறு நபர்களிடம் வளர்ப்புக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோல ஒரு சம்பவம் லண்டனிலும் நடந்திருப்பதும் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.