வைரல்

‘இது எங்க ஏரியா’.. நூலிழையில் தப்பிய பயணிகள் - தலையை ஆட்டியபடி எச்சரிக்கை விடுத்த காட்டு யானை ! (Video)

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் சவாரி சென்ற வாகனத்தை யானை துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘இது எங்க ஏரியா’.. நூலிழையில் தப்பிய பயணிகள் - தலையை ஆட்டியபடி எச்சரிக்கை விடுத்த காட்டு யானை ! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீலகிரி மாவட்டம் முதுமலை வனவிலங்கு புலிகள் காப்பகத்தில் சபாரி சென்ற வாகனத்தை கூட்டத்தில் இருந்த யானை ஒன்று துரத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனவிலங்கு வனவிலங்கு சரணாலயம் செயல்பட்டு வருகிறது. முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் புலி, யானை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவற்றை காண முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் நாள்தோறும் வாகன சவாரி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் முதுமலை வனவிலங்கு சரணாலயத்திலிருந்து வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் வாகன சவாரி சென்ற போது அங்கு யானைக் கூட்டம் இருந்துள்ளதை பார்த்து வனப்பகுதியில் ஓட்டுநர் வனசாலையில் வாகனத்தை இயக்கி உள்ளார்.

அப்போது கூட்டத்தில் இருந்த யானை ஒன்று சுற்றுலா பயணிகள் பயணித்த சவாரி வாகனத்தை துரத்தி உள்ளது. அப்போது காட்டு யானை தனது தலையை ஆட்டியபடி வரவேண்டாம் என சொல்வது போல் மீண்டும் மீண்டும் தலையை ஆட்டி மிரட்டியது. உடனே வாகன ஓட்டுநர் சாதுரியமாக வாகனத்தை பின்நோக்கி இயக்கினார் இதனால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது.

இதை வாகனத்தில் பயணித்த சுற்றுலா பயணி தனது கைப்பேசி மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தற்போது வைரலாகி வருகிறது. மேலும் வனப்பகுதியில் சபாரி சென்ற வாகனத்தை யானை துரத்திய சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories