தி.மு.க அரசு பொறுப்பேற்று இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவுப்பெற்றுள்ளது. இந்த ஓர் ஆண்டில் தி.மு.க அரசு செய்த சாதனைகளை பட்டியலிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில் ட்விட்டரில் நெட்டிசன் ஒருவர் தி.மு.க அரசை பாராட்டி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பலரையும் ரசிக்க வைத்திருக்கிறது. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கலைஞர் ஆரம்பிச்ச தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தோட முதல் பேட்ச் பணியாளர் அப்பா. அந்த துறையோட நோக்கம் ஏழை எளியவர்கள் பசிலயும் பஞ்சத்துலயும் கிடக்காம எல்லாருக்கும் ரேஷனிங் முறையில உணவு பொருட்கள விவசாயிங்கட்டேந்து கொள்முதல் பண்ணி கொண்டு போய் சேர்க்கிறது.
வறுமையான பின்புலத்துலேந்து வந்த எல்லாருக்கும் 3 வேளையும் உணவு-ன்றது எவ்வளோ பெரிய விசயம்னு புரியும் 70'ல பெரும்பாலும் இந்த சுழ்நிலையில இருந்தவங்க/பழகுனவங்களுக்கு. அதோட தாக்கம் கலைஞர் மேலயும் தி.மு.க மேலயும் பல அரசு ஊழியர்களுக்கு உள்ளுற பிடிப்ப தந்துச்சு. அப்பா ஒருநாள் கூட வெளிப்படையா தன்னோட விருப்ப கட்சி தி.மு.க/கலைஞர்-னு சொன்னது கிடையாது. கலைஞர் சம்பந்தமான செய்திகள கடந்து போறப்ப ஒரு பெருமிதமோ, வருத்தமோ அவரோட வார்த்தைகள்ல கவனிக்க முடியும். முக்கியமா கழக ஆட்சியில எல்லா தரப்பு மக்களோட அன்றாட வாழ்கைல ஒரு மாற்றம் வரும்ற நம்பிக்கை.
தாசில்தார் கேடர்ல ஒய்வு பெற்று மாசம் 1417 ரூபாய் ஓய்வூதியம் வாங்குன காலத்துல (Sep 2021 வரை) கூட அவருக்கு கழகம் மேல இருந்த மதிப்பு குறையல. கொரோனா பேரிடர்லேந்து நிச்சயம் கழகம் தன்னோட கடந்த கால நிர்வாக அனுபவம், தலைமயால மீட்டு எடுப்பாங்கனு நம்பிக்கையா சொன்னார்.
அப்பா தன்னோட கடைசி சுவாசத்த தஞ்சை மருத்துவ கல்லூரில நிறுத்தி 8 மாசமாச்சு. 2 நாள்ல கொரோனா இழப்பீட கழக ஆட்சி சக்கரம் கொண்டு வந்து சேர்த்தப்ப, "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" தருணத்துல இனி எல்லாம் சரியாகும்னு சொன்ன அப்பாவோட வார்த்தைகள் தான் கேட்டுச்சு.
கழகத்துல நாங்க யாரும் உறுப்பினர்கள் இல்ல, பதவிக்கோ காசுக்கோ மாரடிக்கல. ஒரு மாநில மக்களோட வாழ்வாதரத்த சுயமரியாதையோட மீட்டெடுக்க முயற்சித்த ஒரு தலைவனுக்கும் கழகத்துக்கும் உணர்வுபூர்மா கூட நிற்க வேண்டிய கடமை இருக்கு. தி.மு.க என்றைக்கும் குடும்ப கட்சி தான். வெல்க திராவிடம்.” எனத் தெரிவித்துள்ளார்.