ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை அளித்தார்.
அப்போது இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரே ஒரு கையெழுத்தின் காரணமாக, ஆயிரம் பேருக்கு, பல்லாயிரம் பேருக்கு, இலட்சம் பேருக்கு, பல இலட்சம் பேருக்கு, கோடிப் பேருக்கு, பல கோடிப் பேருக்கு நன்மைகள் கிடைத்திருக்கிறது. இவை அனைத்தும் ஏதோ வாய்வார்த்தையாக நான் சொல்லவில்லை.
4,000 ரூபாய் கொரோனா உதவித் தொகை பெற்ற குடும்பங்கள் 2 கோடியே 9 இலட்சத்து 81 ஆயிரத்து 900.
கொரோனா கால நிவாரணமாக 13 மளிகைப் பொருள்களைப் பெற்ற குடும்பங்கள் 2 கோடியே 7 இலட்சத்து 77 ஆயிரத்து 535.
21 விதமான பொங்கல் பொருள்களை பெற்ற குடும்பங்கள் 2 கோடியே 12 இலட்சத்து 17 ஆயிரத்து 756.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் - 10 கோடியே 83 இலட்சத்து 7 ஆயிரத்து 713 பேர்.
கொரோனாவில் இறந்த மருத்துவ முன்களப் பணியாளர்கள் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட நிதி உதவி 79 கோடியே 90 இலட்சம்.
ஆவின் பால் விலையை 3 ரூபாய் குறைத்த காரணத்தால் பயன் பெறுபவர்கள் 1 கோடி பேர்.
புதிதாக குடும்ப அட்டை பெற்றவர்கள் 11 இலட்சத்து 47 ஆயிரத்து 844 பேர்.
புதிதாக மின் இணைப்பினைப் பெற்றவர்கள் 9 இலட்சத்து 91 ஆயிரம் பேர்.
அகவிலைப்படி உயர்வால் பயனடைந்த அரசு ஊழியர்கள் 9 இலட்சத்து 32 ஆயிரம் பேர். அகவிலைப்படி உயர்வால் பயனடைந்த ஓய்வூதியதாரர்கள் 7 இலட்சத்து 15 ஆயிரம் பேர்.
நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்கள் 22 இலட்சத்து 20 ஆயிரத்து 109 பேர்.
மகளிர் சுய உதவிக் குழுக்களால் கடன் பெற்றவர்கள் 54 இலட்சத்து 5 ஆயிரத்து 400 பேர்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்ததால், அதன்மூலமாகப் பயன்பெற்றவர்கள் 15 இலட்சத்து 88 ஆயிரத்து 309 பேர்.
புதிதாக உருவாக்கப்பட்ட மகளிர் சுய உதவிக்குழுக்களில் இணைந்தவர்கள் 4 இலட்சத்து 76 ஆயிரத்து 175 பேர்.
மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தால் பயன்பெற்றவர்கள் 93 இலட்சத்து 34 ஆயிரத்து 315 பேர்.
‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தால் பயன்பெற்றவர்கள் 39 ஆயிரத்து 542 பேர்.
104 மருத்துவ சேவை மையத்தால் பயன் பெற்றவர்கள் 3 இலட்சத்து 16 ஆயிரம் பேர்.
108 அவசர கால ஊர்தியால் பயன்பெற்றவர்கள் 16 இலட்சத்து 41 ஆயிரம் பேர்.
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்பட்டவர்கள் 1 கோடியே 34 இலட்சம் பேர். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் சிகிச்சை பெற்றவர்கள் 3 இலட்சத்து 43 ஆயிரம் பேர். கலைஞரின் வருமுன் காப்போம் முகாம் மூலம் பயன் பெற்றவர்கள் 8 இலட்சத்து 25 ஆயிரம் பேர். நடமாடும் மருத்துவக் குழு மூலம் சிகிச்சை பெற்றவர்கள் 1 கோடியே 54 இலட்சம் பேர்.
124 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் 1 இலட்சத்து 90 ஆயிரம் பேர்.
குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கொரோனா காலக் கடன் பெற்றவர்கள் 539 பேர்.
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்மூலம் ஏற்படுத்தப்பட்ட தொழில்கள் மூலமாக வேலை பெற்றவர்கள் 27 ஆயிரத்து 771 பேர். தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் கடன் பெற்றவர்கள் 124 பேர்.
கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர் குடும்ப நிவாரணத் தொகை பெற்றவர்கள் - 315 பேர். கொரோனாவால் உயிரிழந்த குடும்பத்துக்கான இழப்பீட்டுத் தொகை பெற்றவர்கள் – 55 ஆயிரத்து 743 பேர். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான இழப்பீடு தொகை பெற்றவர்கள் – 10 ஆயிரத்து 824 பேர். தொற்றால் உயிரிழந்த பத்திரிக்கையாளர் குடும்பத்துக்கான நிதியுதவி பெற்றவர்கள் - 16 பேர்.
1 இலட்சம் ரூபாய் நிதி உதவி பெற்ற எல்லைப் போராட்ட வீரர்கள் - 76 பேர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இழப்பீடு பெற்ற குடும்பங்கள் – 96 ஆயிரத்து 273 பேர். மழை வெள்ளத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டு இழப்பீடு பெற்றவர்கள் – 3 இலட்சத்து 59 ஆயிரம் பேர். உதவித் தொகை பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் – 2 ஆயிரத்து 457 பேர்.
வருவாய்த் துறையால் பட்டா பெற்றவர்கள் - 1 இலட்சத்து 51 ஆயிரம் பேர். இலவச வீட்டு மனைப் பட்டா பெற்றவர்கள் – 24 ஆயிரத்து 883 பேர். இலவச வீட்டு மனை பெற்ற ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் - 53 ஆயிரம் பேர். புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்கள் - 16 ஆயிரம் பேர். நத்தம் திட்டத்தின்கீழ் வீட்டுமனைப் பட்டா பெற்றவர்கள் - 56 ஆயிரம் பேர். இணையவழிப் பட்டா மாறுதல் பெற்றவர்கள் – 19 இலட்சத்து 52 ஆயிரம் பேர். உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் பயன்பெற்றவர்கள் – 1 இலட்சத்து 24 ஆயிரம் பேர்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வீட்டு வசதி வாரியம் மூலமாக வீடு பெற்றவர்கள் – 6 ஆயிரத்து 323 பேர்.
மாதம் 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை பெறும் கலைஞர்கள் - 1000 பேர்.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தால் வேலை பெற்றவர்கள் - 24 பேர்.
ஒரு கால பூஜை கோவில் பூசாரிகளுக்கான உதவித்தொகை பெற்றவர்கள் – 9 ஆயிரத்து 982 பேர்.
மொட்டை போடும் தொழிலாளர்களுக்கான ஊதியம் பெற்றவர்கள் ஆயிரத்து 744 பேர்.
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தால் பயன்பெற்ற பிள்ளைகள் - 30 இலட்சம் பேர்.
புதிய கைபேசிச் செயலி மூலம், பள்ளிக்குச் செல்ல முடியாத குழந்தைகள் எனக் கண்டறியப்பட்டு, மீண்டும் பள்ளிக்கு அனுப்பப்பட்டவர்கள் 1 இலட்சத்து 80 ஆயிரம் பேர்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தால் பயன்பெறும் மாணவர்கள் - 16 இலட்சம் பேர்.
கட்டாயக் கல்வித் திட்டத்தால் சேர்க்கப்பட்டவர்கள் - 56 ஆயிரம் பேர்.
உயர்த்திய 1,500 ரூபாய் மாதாந்திர உதவித் தொகை பெற்ற மாற்றுத் திறனாளிகள் – 2 இலட்சத்து 11 ஆயிரம் பேர். இலவசக் கருவிகள் பெற்ற மாற்றுத்திறனாளிகள் - 37 ஆயிரம் பேர். உதவித்தொகை பெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் 23 ஆயிரத்து 326 பேர். தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள் 4 இலட்சத்து 82 ஆயிரத்து 518 பேர். வேலைவாய்ப்பு பெற்ற மாற்றுத்திறனாளிகள் 553 பேர்.
கருவுற்ற மகளிருக்கு நடந்த சமூகப் பாதுகாப்பு வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்கள் 90 ஆயிரம் பேர். சொந்தத் தொழில் தொடங்க திருநங்கைகளுக்காக வழங்கப்பட்ட மானியத்தைப் பெற்றவர்கள் 141 பேர்.
முதியோர் இல்லங்களில் பயன்பெற்ற முதியோர் - 711 பேர்.
கொரோனாவால் பெற்றோரை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை பெறும் குழந்தைகள் 285 பேர்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் மனு கொடுத்து உதவிகள் பெற்றவர்கள் 2 இலட்சத்து 29 ஆயிரம் பேர். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் நிலப்பட்டா பெற்றவர்கள் 32 ஆயிரத்து 283 பேர். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற்றவர்கள் 30 ஆயிரத்து 455 பேர். தனிநபர் வீடு பெற்றவர்கள் 19 ஆயிரத்து 665 பேர். போட்டித் தேர்வு முகாம்களில் பயிற்சி பெறுபவர்கள் 12 ஆயிரம் பேர்.
5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை பெற்ற மீனவக் குடும்பங்கள்
1 இலட்சத்து 71 ஆயிரம். சிறப்பு ஊக்கத் தொகை பெற்ற மீனவக் குடும்பங்கள் – 1 இலட்சத்து 51 ஆயிரம் பேர். மீனவ சேமிப்பு நிவாரணத் திட்டத்தின்கீழ் தொகை பெற்றவர்கள் 3 இலட்சத்து 45 ஆயிரம் பேர்.
குடிநீர் இணைப்புப் பெற்ற ஊரக வீடுகள் – 14 இலட்சத்து 32 ஆயிரம்.
பயிற்சி பெற்ற மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 2 இலட்சத்து 42 ஆயிரம் பேர்.
ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் பயிற்சி பெற்ற இளைஞர்கள் - 15 ஆயிரம் பேர். சுய தொழில் தொடங்கிய இளைஞர்கள் - 13 ஆயிரம் பேர்.
மாவட்ட வேலைவாய்ப்பு முகாம் மூலமாக வேலை பெற்றவர்கள்
32 ஆயிரம் பேர். மிதிவண்டிகள் பெற்ற மாணவ மாணவியர் 4 இலட்சம் பேர். முதியோர் ஓய்வூதியத் திட்டப்படி பணம் பெற்றவர்கள் 3 இலட்சத்து 263 பேர்.
தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களின் மூலமாக வேலைவாய்ப்பு பெற்றவர்கள் 68 ஆயிரத்து 800 பேர்.
7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் பயனடைந்த மருத்துவக் கல்லூரி மாணவ மாணவியர் 437 பேர். 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டால் பயனடைந்த பல் மருத்துவ மாணவ மாணவியர் 107 பேர்.
பயிர்க்கடன் பெற்றவர்கள் 14 இலட்சத்து 83 ஆயிரத்து 961 பேர். கூட்டுறவுக் கடன் பெற்றவர்கள் 48 இலட்சத்து 93 ஆயிரத்து 174 பேர்.
டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொகுப்பு பெற்றவர்கள் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 401 பேர்.
காவலர்களுக்கு ஒருநாள் விடுமுறை என்பதால் பயன்பெற்றவர்கள் 63 ஆயிரத்து 77 பேர்.
பல்வேறு நலத்திட்டங்களைப் பெற்ற இலங்கைத் தமிழர்கள் 92 ஆயிரத்து 69 பேர்.
பஞ்சுக்கு ஒரு விழுக்காடு வரியைக் குறைத்த காரணத்தால் பயன் பெற்றவர்கள் 3 ஆயிரத்து 52 பேர்.
மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் - 291 பேர்.
கொரோனா காலத்தில் உதவி பெற்ற புலம்பெயர் தொழிலாளர்கள் – 1.29 இலட்சம் பேர்.
உதவித்தொகை பெற்ற அமைப்பு சாராத் தொழிலாளர்கள் - 1.85 இலட்சம் பேர்.
உரிமை பாதுகாக்கப்பட்டு மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட தொழிலாளர்கள் – 5,235 பேர்.
மீட்கப்பட்ட கொத்தடிமைகள் - 198 பேர்.
நலத்திட்ட உதவி பெற்ற தொழிலாளர்கள் - 50 ஆயிரம் பேர்.
உதவித்தொகை பெற்ற வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்கள் - 55 ஆயிரம் பேர்.
உதவித் தொகை பெற்ற மாற்றுத்திறனாளி பதிவுதாரர்கள் – 14,541 பேர்.
நீண்ட பட்டியலைச் சொன்னேன். இவற்றின்மூலம் கோடிக்கணக்கான தமிழக மக்கள் இந்த ஓராண்டு காலத்தில் நேரடியாகப் பயனடைந்திருக்கிறார்கள். இந்த ஆட்சியானது தமிழ்நாட்டின் ஒவ்வொரு மனிதருக்கும் நேரடியாகப் பயன் தரக்கூடிய ஆட்சியாகச் செயல்பட்டு இருக்கிறது என்பதைப் பெருமையோடு நான் இங்கே பதிவு செய்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.