இந்தியாவின் தொழில்நுட்பத்தின் நகரமாக பெங்களூரு இருந்தாலும் அந்நகரம் விசித்திரமான விநோதமான சம்பவங்களுக்கு பஞ்சமில்லாமல் இருப்பவை என்பதை மறுக்க முடியாது.
அந்த வகையில், ஆன்லைனில் பெறப்பட்ட ஆர்டரை வேறு தளத்தைத் சேர்ந்த டெலிவரி பாய் மூலம் வாடிக்கையாளருக்கு ஸ்விக்கி டெலிவரி பாய் அனுப்பி வைத்திருக்கும் சம்பவம் தான் தற்போது பெங்களுருவின் டாக் ஆஃப் தி டவுன் செய்தியாகியிருக்கிறது.
அதன்படிம் பெங்களுருவைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்விக்கி உணவு டெலிவரி செய்யும் செயலி மூலம் காபே காஃபி டே-ல் காஃபி ஆர்டர் செய்திருக்கிறார்.
அந்த ஆர்டரை பெற்ற டெலிவரி பாய் அதனை தான் டெலிவரி செய்யாமல் மற்றொரு டெலிவர் ஆப் டன்ஸோ மூலம் வாடிக்கையாளருக்கு அனுப்பி வைத்ததோடு ரேட்டிங்கில் 5 ஸ்டார் போடுங்கள் என்றும் கோரியிருந்திருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து காஃபி ஆர்டர் செய்தவர் தன்னுடைய நண்பரிடம் வாட்ஸ் அப்பில் பேசிய சாட்டிங் ஸ்கீரின் ஷாட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்களிடையே பெருமளவில் பரவிய அந்த பதிவுக்கு பலரும் பல விதங்களில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.