வைரல்

GST சாலையில் ஒரு வித்தியாச உணவகம்.. வாடிக்கையாளர்களை கவரும் Coffee Magic : அப்படி என்ன இருக்கு இங்கு!?

GST சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் இலவசமாக மூலிகை தண்ணீர் வழங்குவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

GST சாலையில் ஒரு வித்தியாச உணவகம்.. வாடிக்கையாளர்களை கவரும் Coffee Magic : அப்படி என்ன இருக்கு இங்கு!?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடும்பத்துடன் வாகனங்களில் சுற்றுலா செல்பவர்கள் பலரும் சாலையோரங்களில் தாங்கள் வீட்டில் இருந்து எடுத்து வந்த உணவுகளைப் பகிர்ந்து சாப்பிடுவதை நாம் பலரும் பார்த்திருப்போம். நெடுஞ்சாலைகளில் இரண்டு புறமும் உணவகங்கள் இருந்தாலும், வாடிக்கையாளர்கள் எடுத்து வரும் உணவுகளைச் சாப்பிடுவதற்குப் பல இடங்களில் அனுமதிப்பதில்லை.

இதன் காரணமாகவே நெடுந்தூரம் பயணம் செய்பவர்கள் வீட்டிலிருந்து எடுத்து வரும் உணவைச் சாலையோரமே சாப்பிட வேண்டியிருக்கிறது இந்நிலையில், GST சாலையில் உள்ள Coffee Magic என்ற உணவகம் இப்படிப் பாதுகாப்பற்ற முறையில் சாப்பிடுவதை தவிர்க்கும் விதமாக தங்கள் உணவகத்திலேயே வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வரும் உணவைச் சாப்பிட அனுமதி அளித்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மேலும், தங்கள் உணவகத்தில் மடிக்கணினி மற்றும் செல்போன்களை சார்ஜ் செய்யும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெட்டிவேர் குடிநீர், நன்னாரி குடிநீர், சீரக குடிநீர், ஓமம் குடிநீர், தாகசாந்தி குடிநீர், ஆடாதோடா குடிநீர் ஆகிய 6 வகையான மூலிகை குடிநீரும் இலவசமாக வாடிக்கையாளருக்குக் கொடுக்கப்படுகிறது.

இந்த உணவகத்தில் பாரம்பரிய உணவுகளும் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. இப்படி பல்வேறு சலுகைகள் இந்த உணவகத்தில் இருப்பதால் பயணம் செய்பவர்களுக்கு மிகவும் பிடித்த உணவகமாக Coffee Magic உணவகம் மாறியுள்ளது.

இந்த உணவகத்தை முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரி மனோ சாலமன் என்பவர் நடத்தி வருகிறார். மேலும் இவர்கள் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் உதவி செய்து வருகிறார். இவர் குறித்து சுருக்கமான வரலாறும் உணவகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

ஏதோ வந்தோம், சாப்பிட்டோம் சென்றோம் என்று இல்லாமல் இங்கு வருபவர்கள் மனங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்திற்குச் செல்பவர்கள் தங்களின் அனுபவங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories