கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் காரை நிறுத்தி விட்டு மூன்று பேர் வனப்பகுதியை செல்போனில் வீடியோ எடுத்தனர். அப்போது ஒரு நபர் வனப்பகுதியின் உள்ளே சென்ற போது அங்கிருந்த காட்டு யானை ஒன்று திடீரென அந்த நபரை துரத்தியது.
அப்போது அந்த நபர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடிவந்து காரில் ஏரும் பொழுது நிலைத்தடுமாறி கீழே விழுகிறார். அப்போது காட்டு யானை திடீரென துரத்துவதை நிறுத்தியதால் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி, காரில் ஏறுகிறார்.
இந்த காட்சியை அந்த வழியே சென்றவர்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளனர். இந்த கட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், வாகனத்தின் பதிவு எண்ணை சரிபார்த்து வருகிறோம். பலமுறை விழிப்புணர்வு மற்றும் கடுமையான கண்காணிப்பு இருந்தும் மக்கள் விதிமுறைகளை பின்பற்ற தயங்குகின்றனர். மக்கள் நிலைமையை புரிந்து கொள்ளாத வரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும் என்றனர்.