வன விலங்குகளிலேயே பாசமான குறும்புத்தனமானதாக இருப்பது யானைகளே. உருவ வடிவில் பிரமாண்டமாக இருந்தாலும் அன்பு செலுத்துவதில் கெட்டியான விலங்கு இதுவாகும்.
சில சமயங்களில் யானைகள் அட்டகாசம் செய்வது போன்ற காணொலிகள் சமூக வலைதளங்களில் வெளி வந்தாலும் அவ்வப்போது அவைகள் புரியும் சேட்டைகளும் வெளிவருவது தவறுவதில்லை.
இந்த நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த இந்திய வனத்துறை அதிகாரியான சுஷாந்தா நந்தா என்பவர் ட்விட்டரில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
அதில் சாலையின் ஒரு புறத்தில் இருந்து மறுபுறத்திற்கு ஏராளாமான யானைகள் கூட்டம் கடந்து செல்கின்றன. அதனைக் கண்டதும் வாகன ஓட்டிகள் நிற்கின்றனர். யானைகள் கூட்டம் கடந்ததும் கடைசியாகச் சென்ற யானை ஒன்று வாகன ஓட்டிகள் இருக்கும் பக்கம் திரும்பி நன்றி தெரிவிக்கும் வகையில் தனது தும்பிக்கையை தூக்கி அசைத்துக் காட்டிவிட்டுச் செல்கிறது.
இந்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி யானைகள் ஆர்வலர்கள், விலங்குகள் நல ஆர்வலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.