மு.க.ஸ்டாலின்

ரூ.30.27 கோடி செலவில் 17 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில் ரூ.30.27 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ரூ.30.27 கோடி செலவில் 17 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (26.11.2024) தலைமைச் செயலகத்தில், பதிவுத் துறையின் சார்பில் மதுரை, திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள 7 பதிவு மண்டலங்களில் 30 கோடியே 27 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தார்.

பதிவுத்துறை வாயிலாக மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனம் போன்ற குழுவாகக் கூடி செயல்படும் நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பதிவுத்துறை செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய சார்பதிவாளர் அலுவலகங்களை கட்டுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

ரூ.30.27 கோடி செலவில் 17 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 39 கோடியே 29இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் பதிவுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 30 அலுவலகக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை திறந்து வைத்தல் 2021-2022 மற்றும் 2022-2023-ஆம் ஆண்டுகளில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையில் புதிய சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க, மதுரை மாவட்டம் - கள்ளிக்குடி; திருச்சி மாவட்டம் - முசிறி, காட்டுப்புத்தூர் மற்றும் உப்பிலியாபுரம்; திருவாரூர் மாவட்டம் - குடவாசல்; நாகப்பட்டினம் மாவட்டம் - வேதாரண்யம் மற்றும் நாகூர்; கடலூர் மாவட்டம் - மங்கலம்பேட்டை, புதுப்பேட்டை, பண்ருட்டி, நெல்லிக்குப்பம் மற்றும் குள்ளஞ்சாவடி; கள்ளக்குறிச்சி மாவட்டம் - சங்கராபுரம்; திருவண்ணாமலை மாவட்டம் - ஆரணி; செங்கல்பட்டு மாவட்டம் - திருக்கழுக்குன்றம்; காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர்; திருவள்ளூர் மாவட்டம் - திருத்தணி ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 30 கோடியே 27 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 17 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

banner

Related Stories

Related Stories