தமிழ்நாடு

நாளை உருவாகும் FENGAL புயல் : 2 நாள் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறுகிறது.

நாளை உருவாகும் FENGAL புயல் : 2 நாள் சென்னைக்கு கன மழை எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 800 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (27-11-2024) புயலாக வலுபெறக்கூடும். இது அதற்கடுத்த இரு தினங்களில் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி, தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு சவுதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் என்ற பெயர் சூட்டப்பட உள்ளது. இதையடுத்து தமிழ்நாட்டில் இன்று முதல் டிச.2 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மற்றும் நாளை மறுநாளும் மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கனமழை எச்சரிக்கையை அடுத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

banner

Related Stories

Related Stories