இந்தியா

மசூதியை ஆய்வு செய்ய அனுமதி - ”மதவாதத்துக்கு துணை போகிறதா உச்சநீதிமன்றம்?” : பிருந்தா காரத் கேள்வி!

மதவாதத்துக்கு துணை போகிறதா உச்சநீதிமன்றம்? என பிருந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

மசூதியை ஆய்வு செய்ய அனுமதி - ”மதவாதத்துக்கு துணை போகிறதா உச்சநீதிமன்றம்?” : பிருந்தா காரத் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சியில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. தற்போது காவல்துறையை கொண்டே துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்டு தர்பார் ஆட்சியாக பா.ஜ.க ஆட்சி உருவெடுத்து நிற்கிறது.

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் இந்து கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விஷ்ணு சங்கர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்ததார். இதை விசாரித்த உச்சநீதிமன்றம் மசூதியை ஆய்வு நடத்த உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து நவ. 5 ஆம் தேதி மசூதியில் ஆய்வு நடத்தப்பட்டது. பின்னர் இன்று மீண்டும் ஆய்வு செய்வதற்கு இஸ்லாமிய மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலிஸாருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.

பிறகு போலிஸார் அவர்களை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், மசூதியை ஆய்வு செய்ய அனுமதி அளித்து மதவாதத்துக்கு துணை போகிறதா உச்சநீதிமன்றம்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து கூறியுள்ள பிருந்தா காரத்,"சர்ச்சைக்குரிய வழிபாட்டுத் தலங்களில் ஆய்வு நடத்தலாம் என அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மதவாத அரசியல் செய்யும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் போன்றவர்களுக்கு அந்த தீர்ப்பு ஆயுதமாகி விடுகிறது. நீதிமன்றங்களுக்கு சென்று ஆய்வு செய்வதற்கான உத்தரவுகளை பெற்று, மசூதிகளை இலக்காக்கி கலவரத்தை தூண்டி இஸ்லாமியரை அவர்கள் வேட்டையாடுகின்றனர்” என கேள்வி எழுப்பியுள்ளளார்.

banner

Related Stories

Related Stories