வேலை கிடைக்காமல் இளைஞர்கள் விபரீத முடிவுகள் நடத்து வரும் நிலையில் 70 வயது முதியவர் ஒருவர் பொரி விற்து தனது வாழ்க்கையை நடத்து வருகிறார். இந்த முதியவர் நம்பிக்கையூட்டும் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ஜெயந்தி பாய். 70 வயது முதியவரான இவர் தினமும் சைக்கிளில் சென்று மசாலா பொரி விற்று தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர் தினமும் மாலை 6 மணியிலிருந்து 8 மணி வரை நாக்பூரில் உள்ள காந்தி பாக் மற்றும் இட்வார் பகுதியில் சைக்கிளில் மசாலா பொரி விற்று வருகிறார். மேலும் காலையில் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
காவலாளி பணியில் கிடைக்கும் ஊதியதில் வீட்டு வாகை மற்றும் மருத்துவச் செலவுக்கு போதாததால் பொரி விற்று வருகிறார் ஜெயந்தி பாய். இதிலிருந்து கிடைக்கும் பணத்தைக் கொண்டு செலவுகளைச் சமாளித்து வருகிறார்.
முதியவர் ஜெயந்தி பாய் பொரி விற்கும் வீடியோவை அபினவ் ஜெஸ்வானி என்பவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 2 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் முதியவர் ஜெயந்தி பாய் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.