வைரல்

DPல் பேய் படத்தை வைத்தே காசு பார்த்த சீன ஓட்டுநர்கள்; என்ன காரணம்? எப்படி நடந்தது? ஓர் விநோத சம்பவம்!

ரத்தாகும் பணத்தை பெருவதற்காக சீனாவில் ஊபெர் ஓட்டுநர் ஒருவர் பேய் படத்தை வைத்தது தெரிய வந்திருக்கிறது.

DPல் பேய் படத்தை வைத்தே காசு பார்த்த சீன ஓட்டுநர்கள்; என்ன காரணம்? எப்படி நடந்தது? ஓர் விநோத சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பயணிகள் சவாரி ரத்து செய்வதால் கிடைக்கும் பணத்துக்காக வேண்டுமென்றே ஊபர் ஓட்டுநர்கள் தங்களது கணக்கின் அடையாள படத்தை (Profile Pic) பேய் போன்று வைத்துள்ளது தெரியவந்திருக்கிறது.

நேரடியாக ஆட்டோ டாக்சியில் சென்றால் ஏகபோகமாக கட்டணம் வசூலிப்பதால் பெரும்பாலும் மக்கள் ஓலா, ஊபர் போன்ற வசதிகளை நாடிச் செல்கின்றனர். குறைவான கட்டணத்தோடு அடிக்கடி தள்ளுபடிகளும் அள்ளி வீசுவதால் மக்களின் விருப்பமும் அதுவாகவே இருக்கிறது.

மேலும் அவ்வாறு புக் செய்து பயணிப்போர் ஏதேனும் வண்டியில் விட்டுச் சென்றால் கூட ஓட்டுநரின் விவரங்களை அறிந்து கண்டுபிடித்துவிடலாம் என்ற எண்ணமும் இருக்கும். இருப்பினும் இது போன்ற பயணத்தின் போது சில விபரீதமான சம்பவங்களும் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது.

DPல் பேய் படத்தை வைத்தே காசு பார்த்த சீன ஓட்டுநர்கள்; என்ன காரணம்? எப்படி நடந்தது? ஓர் விநோத சம்பவம்!

அப்படி இருக்கையில் சீனாவில் உள்ள ஊபெர் ஓட்டுநர்கள் தங்களது கணக்கின் அடையாளத்தை பேய் அல்லது ஜாம்பி போன்று வைத்திருக்கிறார்கள். இதனால் ஊபரில் டாக்சி புக் செய்வோர் சவாரி கிடைத்தால் அலறியடித்துக் கொண்டு உடனடியாக அதனை ரத்து செய்து விடுக்கின்றனராம். இவ்வாறு செய்வதன் மூலம் பயணியிடம் இருந்து பிடித்தம் செய்யும் சிறு தொகை ஓட்டுநருக்கு பகிர்ந்தளிப்பது வாடிக்கை.

இதுபோன்று கேன்சல் தொகையை பெருவதற்காகவே பயணிகளை அச்சமூட்ட பேய் போன்ற படத்தை வைத்து சவாரி செய்யாமலேயே ஊபர் ஓட்டுநர்கள் பணம் ஈட்டியிருக்கிறார்கள். இந்த விவகாரம் ஊடகம் மூலம் ஊபர் நிறுவனத்துக்கு தெரிய வந்ததும் ஓட்டுநர்கள் எந்த மோசடி வேலைகளிலும் ஈடுபடாத வகையில் தொழில்நுட்பத்தை கையில் எடுத்திருக்கிறது.

அதன்படி ஓட்டுநர்களின் முகமும், நிறுவன கோப்புகளில் உள்ள முகமும் பொருந்துவதை உறுதி செய்வதோடு, மோசடி வேளைகளில் ஈடுபடுவோரை தடுத்து அவர்கள் மீது தக்க நடவடிக்கையும் மேற்கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் 2016ம் ஆண்டு நடைபெற்றிருந்தாலும் தற்போது இது தொடர்பான செய்திகள் இணையத்தில் உலவி வருவது சில ஐயப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories