வைரல்

“592 கோடிக்கு வாங்கிய பிரமாண்ட சொகுசு பங்களா” : லண்டனில் குடியேறுகிறாரா முகேஷ் அம்பானி - உண்மை என்ன?

ஆசிய பணக்காரர்களில் ஒருவரும் இந்திய பணக்காரர்களில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பவருமான முகேஷ் அம்பானி, லண்டனில் வாங்கியுள்ள வீட்டை 2-வது வீடாக மாற்றி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

“592 கோடிக்கு வாங்கிய பிரமாண்ட சொகுசு பங்களா” : லண்டனில் குடியேறுகிறாரா முகேஷ் அம்பானி - உண்மை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி. இவருடைய ரிலையன்ஸ் நிறுவனத்தின் உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. தொடர்ந்து ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

மும்பையின் அல்மவுன்ட் சாலையில் உள்ள முகேஷ் அம்பானியின் 27 மாடிகள் கொண்ட ‘அன்டிலியா’ இல்லம் மிகவும் பிரபலமானவையாகும். மிகப் பெரும் செலவில் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடத்தில் இல்லாத வசதிகளே கிடையாது எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக மும்பையில் இருக்கும் இந்த வீட்டி வசிக்கும் முகேஷ் அம்பானிக்கும், அவருடைய மனைவி நீட்டா அம்பானிக்கும் சலிப்பு ஏற்பட்டதால் வேறு பகுதிக்குச் செல்லப்போவதாக செய்திகள் கசிந்தன. அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக வாங்கும் வீட்டை மிகப் பிரம்மாண்டமான சூழலில் அமைக்க வேண்டும் என்பதால், பல நாடுகளுக்குச் சென்று புதிய வீடு வாங்குவதற்கான தேடலை தொடங்கினார்கள்.

“592 கோடிக்கு வாங்கிய பிரமாண்ட சொகுசு பங்களா” : லண்டனில் குடியேறுகிறாரா முகேஷ் அம்பானி - உண்மை என்ன?

அந்தவகையில், சமீபத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் அருகே உள்ள பக்கிங்காம்ஷைர் மாகாணத்தில் உள்ள ஸ்டோக் பார்க் என்ற இடத்தில் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தையும், அதில் 49 படுக்கை அறைகளுடன் கொண்ட வீட்டையும் ரூ.592 கோடிக்கும் வாங்கி இருப்பதாக, ‘Mid Day’ என்ற ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

விரைவில் முகேஷ் அம்பானியின் குடும்பம் அங்கே குடியேற இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் அத்தகைய தகவல் உண்மை அல்ல என்று ரிலையன்ஸ் நிறுவனம் நேற்றிரவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ரிலையன்ஸ் நிறுவன தலைவரும், அவருடைய குடும்பமும் லண்டனில் குடியேறப் போவதாக வெளியாகி உள்ள தகவல் அடிப்படை இல்லாதது. யூகத்தின் அடிப்படையிலானது. லண்டன் மட்டுமின்றி உலகத்தின் எந்த பகுதியிலும் அவர்கள் குடியேற மாட்டார்கள். லண்டனில் வாங்கப்பட்டுள்ள ‘ஸ்டோக் பார்க்’ எஸ்டேட், கோல்ப் மற்றும் விளையாட்டு பொழுதுப்போக்கு பூங்காவுக்காக வாங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories