வைரல்

தீப ஒளி திருநாள் இரவு.. நாசா வெளியிட்ட உண்மையான புகைப்படம் இதுதான்! #FactCheck

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இந்திய மக்களுக்கு தீப ஒளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

தீப ஒளி திருநாள் இரவு.. நாசா வெளியிட்ட உண்மையான புகைப்படம் இதுதான்! #FactCheck
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இந்திய மக்களுக்கு தீப ஒளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக நாசா தனது ட்விட்டர் பக்கத்தில், பால்வீதி மண்டலத்தின் அருகே உள்ள ஆயிரக்கணக்கான வண்ணமயமான நட்சத்திரங்களின் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துச் செய்தியும் வெளியிட்டுள்ளது.

அந்த வாழ்த்துச் செய்தியில், “அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்.. குளோபுலர் கிளஸ்டர் என்று அழைக்கப்படும் இந்த நட்சத்திர விளக்குகளின் திருவிழா ஹப்பிள் தொலைநோக்கி மூலம் பதிவுசெய்யப்பட்டது. இது பால்வீதி மண்டலத்தின் அருகே உள்ள அடர்த்தியான ஆயிரக்கணக்கான வண்ணமயமான நட்சத்திரங்களின் தொகுப்பு” எனத் தெரிவித்துள்ளது.

நாசாவின் இத்தகைய பதிவுக்கு பலரும் தங்களது மகிழ்ச்சியை பதிவிட்டு வருகின்றனர். முதன் முதலாக நாசா தற்போதுதான் இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆனால் சிலர் “தீபாவளி நாளில் நாசா எடுக்கப்பட்ட இந்தியாவின் புகைப்படம். தீப ஒளி வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா” என போட்டோஷாப் செய்த போலி புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories