வைரல்

உடல் எடையை குறைக்கும் அற்புத கனி எது தெரியுமா? - சீக்ரெட்ஸ் உடைக்கும் இளம் மருத்துவர்!

நித்தமும் ஆப்பிள், ஆரஞ்சு பழங்களையே நோயாளிகளுக்கு வாங்கிக் கொடுப்பதற்கு பதில் இந்த கனியை கொடுங்களேன் என அறிவுறுத்தியிருக்கிறார் மருத்துவர் அரவிந்த ராஜ்.

உடல் எடையை குறைக்கும் அற்புத கனி எது தெரியுமா? - சீக்ரெட்ஸ் உடைக்கும் இளம் மருத்துவர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மருத்துவமனை அல்லது வீடுகளில் இருக்கும் நோயாளிகளை காணச் செல்லும் பெரும்பாலான உறவினர்கள், பார்வையாளர்கள் ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களை வாங்கிச் செல்வதே வழக்கம்.

ஆனால் ஆப்பிள், ஆரஞ்சு பழங்களுக்கு பதிலாக கொய்யாப்பழம் வாங்கி கொடுப்பது மிகவும் சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஏனெனில், 100 கிராம் ஆப்பிளில் 15 கிராம் மாவுச்சத்தும், 0.3 கிராம் புரதமும் உள்ளது. ஆனால், அதே 100 கிராம் கொய்யாவில் 13 கிராம் மாவுச்சத்தும், 2.5 கிராம் புரதம் உள்ளது.

மேலும், ஆப்பிளில் விட்டமின் C - 7% = 4.5 IU விட்டமின் A - 1% = 54 IU உள்ளது. இதுவே, கொய்யாவில் விட்டமின் C - 380% = 228.3mg விட்டமின் A - 12% = 624 mg உள்ளது.

இப்படியாக தாதுக்கள், விட்டமின்களின் அளவுகளை கணக்கில் கொண்டாலே கொய்யா ஆப்பிளை விட சிறந்த கனியாக கருதப்படும்.

இதுபோக, கொய்யாப்பழத்தில் ரத்த சர்க்கரையை ஏற்றும் அளவான Glyceminc Index வெறும் 32%. ஆப்பிள், ஆரஞ்சு, மா, வாழை, போன்ற பல பழங்களை ஒப்பிடுகையில் இது மிகக்குறைவு. இதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு அதிக அளவில் தூண்டப்படாது. உடல் எடையும் கூடாது.

உடல் எடையை குறைக்க முற்படுவோர் நாள்தோறும் ஒரு கொய்யாப்பழத்தை உட்கொண்டால் சிறந்த பலனை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories