ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் உயரம் தாண்டுதல் பிரிவில் (டி - 63) இந்தியாவின் தங்கவேலு மாரியப்பன் 1.86 மீ உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
மற்றொரு இந்திய வீரர் சரத் குமார் 1.83 மீ உயரம் தாண்டி வெண்கலப்பதக்கம் வென்றார். இந்த பிரிவில் அமெரிக்க வீரர் சாம் (1.88 மீ) தங்கப்பதக்கம் வென்றார். பாராலிம்பிக் தொடர்களில் மாரியப்பனுக்கு இது 2-வது பதக்கமாகும்.
கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கம் வென்றார். டோக்கியோ தொடரிலும் தங்கப்பதக்கம் வெல்லும் முனைப்பில் தான் மாரியப்பன் ஜப்பான் சென்றார். ஆனால் கடும் காய்ச்சல் காரணமாக கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்டார். இதனால் தொடக்க நிகழ்வில் பங்கேற்மால் செவ்வாயன்று நடைபெற்ற போட்டியில் மட்டும் களமிறங்கினார். மாரியப்பன் தங்கப்பதக்கம் வெல்லாததற்கு காய்ச்சலும் முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் சக இந்திய வீரர் சந்தீப் சவுத்ரி, தங்கவேலுவைத் தனது முதுகில் தூக்கிக்கொண்டு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.