தாலிபன்களின் ஆக்கிரமிப்பால் ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக தொடர்ந்து ஐந்தாவது நாளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். சொந்த நாட்டிலேயே அகதியாக வாழ வேண்டி வரும் நிலை உருவாகும் என்பதால் இருப்பிடம், உடைமைகளை விட்டுவிட்டு பிழைத்தால் போதும். என எண்ணி முயற்சித்து வருகிறார்கள்.
அவ்வாறு வெளியேற நினைக்கும் மக்களை பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். இதுவரையில் அமெரிக்காவால் சுமார் 7000 பேர் ஆப்கானில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
அது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி காண்போரை கண்ணீரில் மிதக்க வைக்கிறது. அவ்வகையில் தாய் ஒருவர் தனது கைக்குழந்தையை காப்பாற்றுவதற்காக வேலி மீது வீசும் காட்சி தற்போது மனதை உருக வைத்துள்ளது.
காபூல் விமான நிலையத்தில் சூழ்ந்துள்ள மக்களை மீட்க வந்திருக்கும் சர்வதேச ராணுவத்தினர் வேலிக்கு மறுபுறத்தில் இருந்து குழந்தைகளை பிடித்து மீட்டு வருகின்றனர். அவ்வாறு வேலி வழியாக தூக்கி ஒப்படைக்கப்படும் குழந்தைகள் அந்த கம்பிகளில் சிக்கும் பரிதாபமும் நிகழ்கிறது. இந்த காட்சிகளை கண்டு இணைய வாசிகள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள். மேலும் தாலிபன்கள் ஒரு போது மாறப்போவதில்லை என்றும் பதிவிட்டிருக்கிறார்கள்.
இதனிடையே ஆப்கானை விட்டு வெளியேறுவோரை தடுத்து நிறுத்து துப்பாக்கியை நீட்டி தாலிபன்கள் மிரட்டி அச்சுறுத்தி வருகிறார்கள்.