தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த அ.தி.மு.க, தற்போது தங்களது கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவும், கட்சி நிர்வாகிகள் மீது பாயும் ஐடி ரைடுகளில் இருந்து தப்பிக்க பிரதமர் மோடியை சந்திக்க டெல்லிச் சென்றுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க அமோக வெற்றிப் பெற்றதற்கு பிறகு தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை மாற்றுக் கட்சியினர் பலரும் பாராட்டுவதோடு தங்களை தி.மு.கவுடன் இணைத்துக்கொள்ளும் வேலைகளில் தற்போது இறங்கியுள்ளனர்.
இதில், கடந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.கவின் இரட்டை தலைமை கொடுமையைத் தாங்கிக்கொண்டிருந்த முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் மாவட்டங்கள் தோறும் தி.மு.கவில் தொடர்ந்து இணைத்து வருகின்றனர்.
இது அ.தி.மு.க தலைமைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் அ.தி.மு.கவை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலையை தொடங்கியுள்ளது அ.தி.மு.க தலைமைக்கு இது மற்றொரு தலைவலியாக அமைந்துள்ளது.
இதனால் கட்சியை காப்பாற்ற முடியாத விளிம்பு நிலையில் இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் உள்ளதாக செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. ஒருபுறம் கட்சிக்கு ஆபத்து என்றால், மறுபுறம் ஊழல் வழக்குகளில் அ.தி.மு.கவின் முக்கிய புள்ளிகள் அடுத்தடுத்து சிக்குவது அடுத்தவொரு ஆபத்தாக மாறிவருகிறது.
குறிப்பாக, அடுத்தமுறை ஆட்சிக்கு வரமாட்டோம் எனத் தெரிந்தே கிடைத்தவரை பணத்தை கொள்ளையடித்து செட்டில் ஆகிவிடவேண்டும் என மக்கள் பணத்தை சுருட்டிய அ.தி.மு.க அமைச்சர்கள் பலரும் ஊழல் - முறைகேடு வழக்குகளில் அடுத்ததடுத்து சிக்கி வருகின்றனர்.
மேலும் பலரின் முறைகேடுகளை விசாரணை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில்,பலரும் கதிகலங்கியுள்ளதாக அவர்களின் வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளது.
இந்நிலையில்தான் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த அ.தி.மு.க, தற்போது தங்களது கட்சியையும் கட்சி நிர்வாகிகளையும் காப்பாற்றிக் கொள்ள டெல்லிச் சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர். இவர்களின் டெல்லி பயணம் தமிழ்நாட்டின் நலனுக்கு என்று அ.தி.மு.கவினர் கூறினால், உண்மை நிலை என்ன என்று மக்களுக்கு தெரியும் என்பதே நிதர்சனம்.
அதுமட்டுமல்லாது அ.தி.மு.க தலைமையின் டெல்லி பயணத்தை நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அ.தி.மு.கவினர் சட்டை பாக்கெட்டில் அடகு சீட்டுவைத்துள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. அது குறித்த உண்மை என்னவென்று பார்ப்போம்.
எப்போது சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படம் தெரியும் படி உலாவி வருவதுதான் இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் உள்ளிட்ட அ.தி.மு.க தலைமைகளின் வழக்கம். அந்தவகையில் பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்ற அ.தி.மு.க தலைமை நிர்வாகிகளின் சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படத்தை மறைத்து அதன்மீது சீட்டு ஒன்று இருந்தது.
இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் உள்ளிட்ட அ.தி.மு.க தலைமை நிர்வாகிகளின் சட்டை பாக்கெட்டில் அந்த சீட்டை பார்த்த பலரும் அது அடகு சீட்டு என்றும், கட்சியை அடமானம் வைத்த ரசீது என்றும் கிண்டலாக விமர்சனம் செய்து வந்தனர்.
ஆனால் அந்த சீட்டுக்குறித்த உண்மைத்தன்மை என்னவென்றால், அது பிரதமரை சந்திப்பதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் அளிக்கும் கேட்பாஸ் எனப்படும் ஒருவகையான அனுமதி சீட்டாகும். இதன்மூலம் Factcheck மூலம் ஆராய்ந்ததில், அ.தி.மு.கவினர் சட்டை பாக்கெட்டில் இருந்தது அடகு சீட்டு அல்ல; கேட்பாஸ் என தெரியவந்துள்ளது.