வைரல்

“பிங்க் வாட்ஸ் அப்-க்கு ஆசைப்பட்டு தரவுகளை பறிகொடுத்து விடாதீர்கள்” - சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை!

பிங்க் வாட்ஸ் அப் குறித்து எச்சரிக்கை விடுக்கும் சைபர் வல்லுநர்கள்.

“பிங்க் வாட்ஸ் அப்-க்கு ஆசைப்பட்டு தரவுகளை பறிகொடுத்து விடாதீர்கள்” - சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகின் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் செயலியாக இருக்கிறது வாட்ஸ் அப். இதில் எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல செய்திகள் பகிரப்படுகிறது அதற்கு இணையாக அல்லது அதனை தாண்டியும் வதந்திகளும், போலி செய்திகளும் பகிரப்படுகிறது.

பொய்ச் செய்திகள் அதிகம் பகிரப்படுவதால் Forward Option முதற்கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் மக்கள்தான் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்கையில் வாட்ஸ் அப் பற்றி வாட்ஸ் அப்பிலேயே போலியான செய்தி பரவி வருவது பயனர்களிடையே பெரும் பேசு பொருளாகியுள்ளது. என்னவெனில், பிங்க் வாட்ஸ் அப் என்ற பெயரில் புதிதாக அப்டேட்கள் விடப்பட்டுள்ளது என குறிப்பிட்டு பயனர்களுக்கு APK லிங்க் பகிரப்பட்டு வருகிறது.

“பிங்க் வாட்ஸ் அப்-க்கு ஆசைப்பட்டு தரவுகளை பறிகொடுத்து விடாதீர்கள்” - சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கை!

அந்த லிங்க்-ஐ க்ளிக் செய்தால் அதன் மூலம் பயனர்களின் தனிநபர் தகவல்கள் அனைத்து திருடப்பட்டு சைபர் திருட்டுக்கு வழிவகுக்கிறது. ஆகவே இது போன்ற வதந்தியான போலியான செய்திகளை லிங்குகளை ஆர்வமிகுதியில் சென்று பார்ப்பதை விட அவற்றை தவிர்ப்பதே நலம் பயக்கும் என சைபர் தரப்பினர் கூறுகின்றனர்.

மேலும் வாட்ஸ் அப் போன்ற செயலிகளை கூகுள், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும் எனவும் இது போன்ற APK லிங்க் அல்லது இன்ன பிற தளங்களில் இருந்து செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல, பிங்க் வாட்ஸ் அப் பெயரில் ஏதேனும் லிங்க் கிடைக்கப் பெற்றால் அதனை பயன்படுத்தவோ, மற்றவர்களுக்கு பகிரவோ வேண்டாம் என்றும் அந்த லிங்க் மூலம் பயனர்களின் செல்ஃபோன் ஹேக் செய்யப்படக் கூடும் எனவும் சென்னை அடையாறு துணை ஆணையர் விக்ரமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories