வைரல்

எளிதாக முட்டை ஓடு உரிப்பது எப்படி? வைரலாகும் புதிய உத்தி! (வீடியோ)

வேகவைத்த முட்டையின் தோலை எளிதில் உரிப்பது எப்படி என்பதற்கான செய்முறை வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

எளிதாக முட்டை ஓடு உரிப்பது எப்படி? வைரலாகும் புதிய உத்தி! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சமையல் செய்வது கலை என்றால், அந்த சமையலை செய்வதற்கு தேவைப்படும் காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை பதமாக கையாள்வது பெரிய கலையாகவே உள்ளது. இதனை இல்லத்தரசிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கையாள்வார்கள்.

இருப்பினும், இணையத்தில் பரவும் வீடியோக்களை பார்த்து அதன்படியே பல பெண்களும், ஆண்களும் முறையாக சமைக்க முடியாமலும், அந்த காய்கறிகளை முறையாக வெட்டத்தெரியாமலும் சொதப்புவது வழக்கம்.

எளிதாக முட்டை ஓடு உரிப்பது எப்படி? வைரலாகும் புதிய உத்தி! (வீடியோ)

இந்நிலையில், பல உபயோகமான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானாலும், முட்டையின் தோலை உரிப்பதில் செய்யப்படும் நேர்த்தியை விளக்கும் விதமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், வேகவைத்த முட்டையின் மேலோட்டை எளிமையாக உரிக்கும் வகையில் வீடியோவில் செய்முறை விளக்கம் உள்ளது.

வேகவைத்த முட்டையை ஒரு டம்ளரில் போட்டு குளிர்ந்த நீரினால் நிரப்பி அதனை சில நொடிகள் குலுக்கிய பிறகு இலகுவாக முட்டையில் தோல் உரிவதைக் காணலாம்.

இந்த வீடியோவை கண்ட லட்சக்கணக்கானோர் தங்களது வியப்பையும் ஆச்சர்யத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். சிலர் இந்த முறையை செய்து பார்த்து பலனளிக்காமல் அதிருப்தி அடைந்து பதிவிட்டதையும் காணலாம். இதுவரையில் இந்த வீடியோ 3 மில்லியனுக்கும் மேலான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

இதேபோல, கடந்த ஜூன் மாதம் பூண்டின் தோலை உரிப்பது குறித்த வீடியோ ஒன்று இதேபோல வைரலானது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories