வைரல்

“காவிகளே, எது கலாச்சாரம்?” : உடை குறித்து விமர்சித்தவர்களை வெளுத்துவாங்கிய ஜோதிமணி எம்.பி !

“காவிகளே, உடை என்பது எனது தனிப்பட்ட உரிமை; அதனால் அமைதியாகுங்கள்” என தன் உடை குறித்து விமர்சிப்பவர்களுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பதில் அளித்துள்ளார்.

“காவிகளே, எது கலாச்சாரம்?” : உடை குறித்து விமர்சித்தவர்களை வெளுத்துவாங்கிய ஜோதிமணி எம்.பி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவில் சர்வதேச பெண் அரசியல்வாதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி 2வது முறையாக கலந்துகொள்கிறார். இதற்காக அமெரிக்கா செல்லவிருந்த ஜோதிமணியை தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி வழியனுப்பி வைத்தார்.

அப்போது இருவரும் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர். அப்போது ஜோதிமணி எம்.பி ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட் உடையணிந்திருந்தார். இந்நிலையில் அவரது உடையை விமர்சித்து இந்துத்துவா கும்பல் மோசமான வகையில் சமூக வலைதளங்களில் தாக்குதல் நடத்தினர். தமிழக பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ பக்கத்திலும் விமர்சிக்கப்பட்டது.

தன்னை மோசமான முறையில் விமர்சித்தவர்களுக்கு ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தக்க பதில் அளித்துள்ளார். அதில், “சர்வதேச அளவிலான பெண் அரசியல்வாதிகள் மாநாட்டில் பங்கேற்பதால் எனக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. அது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் சில காவிகள், பெண் வெறுப்பாளர்களின் வஞ்சக எண்ணங்களை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. உடை என்பது எனது தனிப்பட்ட உரிமை. அதனால் அமைதியாகுங்கள்.

எப்போதுமே ஏன் பெண்ணின் உடை மட்டும் விவாதத்துக்கு உள்ளாகிறது? ஒருவரின் தனிப்பட்ட விருப்பத்தில் தலையிடுவதுதான் மற்றவர்களின் வேலையாக இருக்கிறது. குறிப்பாக உடைகுறித்து விமர்சிக்கும் ஆண்கள் அனைவரும் தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்க வேட்டிஅணிகின்றனரா? பிறருக்கு மரியாதை அளிப்பதுதான் தமிழ் - இந்தியக் கலாச்சாரம். முதலில் அதைக் கற்றுக்கொள்ளுங்கள்” என அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், “காட்டன் சேலை, ஜீன்ஸ் போன்ற ஆடைகள் எனது விருப்பமான உடைகள். எனவே நான் திரும்பி வந்தவுடன் அவற்றில் சிலவற்றை நீங்கள் நெஞ்செரிச்சல் அடையும் வகையில் பதிவிடுவேன். அதுவரையும், கலாச்சாரம் பற்றி தேடி கற்றுக்கொள்ளுங்கள். ஏன் பெண்கள் முன்னோக்கிச் செல்வதில் இத்தனை தடைகள்?

நான் கலந்துகொண்ட கூட்டத்தில், ஏன் பெண் தலைவர்கள் தோற்றம், உடை, சிரிப்பு, அவர்களின் மணவாழ்வு ஆகியவற்றை குறிவைத்து தாக்கப்படுகிறார்கள் என்றும், அதேசமயத்தில் அத்தகைய பிரச்னைகளை ஆண்கள் சந்திப்பதில்லை என்பது குறித்தும் விவாதித்தோம்.

அதன் அடிப்படையில் பெண்கள் மீதான வெறுப்பை எதிர்த்து நாங்கள் போராடுவோம். எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அத்தனை ஆண்களுக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிகிறது.

banner

Related Stories

Related Stories