நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியா அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம், நிலவை எட்ட சிறிது தொலைவு இருந்தபோது விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.
விக்ரம் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்ட தகவலால் நாடே கவலைப்பட்டது. இஸ்ரோ தலைவர் கே.சிவன், கலங்கிய காட்சி எல்லோரையும் கலங்கவைத்தது. இதைத்தொடர்ந்து, சிவனின் தலைமையில் இஸ்ரோ புதிய உச்சத்தைத் தொடும் என்று பலரும் நம்பிக்கை ஊட்டினர்.
சமீபத்தில், பெங்களூருவிலிருந்து இண்டிகோ விமானத்தில் எகனாமி கிளாஸ் வகுப்பில் சிவன் பயணித்தார். விமானத்தில் சிவன் ஏறியதைப் பார்த்த பணிப்பெண்கள் மற்றும் அங்கிருந்த பயணிகள் அவரை கைதட்டி வரவேற்றனர். மேலும், பயணிகள் அவருடன் கைகுலுக்கி செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.
விமானத்தில் எகானமி கிளாஸில் பயணித்த சிவனை பலரும் பாராட்டி வருகின்றனர். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.