வைரல்

“எல்லாமே சரியா இருக்கா... சரி 100 ரூபாய் கொடுத்துட்டுப் போ” : இளைஞர்களிடம் பணம் பறித்த போலிஸ்!

உரியஆவணங்களுடன் தலைக்கவசம் அணிந்து வந்த கேரள இளைஞர்களிடம் வலுக்கட்டாயமாக 100 ரூபாயை போலிஸார் வசூல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 “எல்லாமே சரியா இருக்கா... சரி 100 ரூபாய் கொடுத்துட்டுப் போ” : இளைஞர்களிடம் பணம் பறித்த போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த வாரம் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் இருசக்கர வாகனத்திலேயே சுற்றுலா செல்ல கோவை வந்தனர். அப்போது காருண்யா பல்கலைக்கழக பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலிஸார் அவர்களை மறித்து ஆவணங்களைச் சரி பார்த்தனர்.

வாகன சோதனையில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் மாறன், அவர்களின் தகவல்களை வாங்கிக்கொண்டு தலைக்கு நூறு ரூபாய் வீதம் 600 ரூபாய் கொடுத்துச் செல்லும்படி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள், “தலைக்கவசம் அணிந்து வந்த நாங்கள் ஆவணங்களைக் காட்டிய பிறகும் எங்களிடம் ஏன் பணம் கேட்கிறீர்கள்” எனக் கேட்டுள்ளனர்.

எல்லோரும் தலைக்கவசம் அணிந்திருந்தீர்களா எனக் கேள்வி எழுப்பிய காவல் ஆய்வாளர் மாறன், “சரி.. அனைவருக்கும் சேர்த்து 100 ரூபாய் மட்டும் கொடுங்கள்” என கட்டாயப்படுத்தியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து அங்கிருந்து செல்வதற்காக இளைஞர்களும் 100 ரூபாய் கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தின்போது தலைக்கவசத்தில் இருந்த வீடியோ கேமரா மூலம் அனைத்தும் பதிவாகியுள்ளது. அதில் ஆய்வாளர் பணம் வாங்குவதும் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை அந்த இளைஞர்களில் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லஞ்சம் வாங்கிய அதிகாரியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories